டி.டி.வி.தினகரன் திவாலானவர் – அமலாக்கத்துறை சட்ட நடவடிக்கை !  அடுத்து என்ன நடக்கும் ?

0

டி.டி.வி.தினகரன் திவாலானவர் – அமலாக்கத்துறை சட்ட நடவடிக்கை !  அடுத்து என்ன நடக்கும் ?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வங்கிக் கணக்கில் 1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டிலிருந்து ரூ.62.61 இலட்சம் அமெரிக்க டாலராக அங்கீகாரமற்ற முகவர் மூலமாக டெபாசிட் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை அன்னியச் செலாவணி மோசடி (பெரா) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

https://businesstrichy.com/the-royal-mahal/

தினகரன் - ஓ.பி.எஸ்
தினகரன் –

இந்த வழக்கில் 1998ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு ரூ.31கோடி அபராதம் தொகையைச் செலுத்தவேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்தார். அபராதத் தொகை ரூ.28கோடியாக குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

கடந்த 25 ஆண்டு காலம் டிடிவி தினகரன் அபராதத் தொகை ரூ.28கோடியை அமலாக்கத்துறைக்குச் செலுத்தவில்லை. இந்நிலையில் அபராதத்தொகையைச் செலுத்தமுடியாத டிடிவி தினகரன் திவாலாகி விட்டார் என்று அறிவிக்கச் சட்டப்படியான நடவடிக்கை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன் வழக்கறிஞர் பி.குமார் ‘அபராதத்தைச் செலுத்தமுடியவில்லை என்பதற்காகத் தினகரனைத் திவாலானவர் என்று அறிவிக்க முடியாது” என்று வாதிட்டார். இந்த வழக்கு வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திவாலானவர் என்றால் என்ன?

ஒருவர் நிறைய பேரிடம் கடன் வாங்கித் தொழில் நடத்துகிறார். தொழிலில் நட்டம் ஏற்பட்டு விடுகின்றது. கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவருக்குக் கடன்தொகை கேட்டு நெருக்கடி கொடுக்கும்போது, கடனைத் திருப்பித் தரமுடியாவில்லை என்றும் தன்னிடம் உள்ள சொத்தின் மதிப்பு வாங்கிய கடனைவிட அதிகம் என்று நீதிமன்றத்தில் அறிவிப்பை வெளியிடுவார். நீதிமன்றம் கடன் வாங்கியவர் மீதுள்ள சொத்துகளைக் கணக்கிட்டு, அதை ஏலம் விட்டு, கடன் கொடுத்தவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும். இதனைத் தொடர்ந்து கடன் வாங்கியவர் திவாலானவர் (insolvent) என்று அறிவிக்கப்படுவர். இதற்கு மஞ்சள் நோட்டீஸ் என்றும் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. இதனையடுத்து, கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவரிடம் கடன் கேட்டு இனி எந்த நெருக்கடியையும் தரமுடியாது என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டவரை நீதிமன்றம் இறந்தவராகவே கருதும். 1970களில் திவாலானவர்கள் சவப்பெட்டிகளில் படுத்து ஒருமணிநேரம் கழித்து எழுவார்கள். இப்போது இந்த நடைமுறையில்லை. திவாலானவர் அரசிடமிருந்து எந்த உதவியையும் பெறமுடியாது. மேலும் வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் நிற்கும் உரிமை எனச் சட்டப்படியான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். திவாலானவர் மேற்கொண்டு எந்த வங்கியிலும், தனியார் நிறுவனங்களிலும் கடன் பெறமுடியாது. தன் பெயரில் எந்தச் சொத்தும் வாங்கமுடியாது.

திவால் நோட்டீஸ் – வெண்ணிறடை நிர்மலா வரலாறு

தமிழ்நாட்டில் இயங்கி வந்த சட்டமன்ற மேலவைக்கு 1986இல் வெண்ணிற ஆடை நிர்மலாவை உறுப்பினராக (MLC) நியமனம் செய்தார் எம்.ஜி.ஆர். நிர்மலா ஏப்ரல் 23, 1986இல் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆரின் இந்தத் திட்டத்திற்கு எதிர்பாராத ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது. வெண்ணிற ஆடை நிர்மலா வங்கி ஒன்றியில் வாங்கிய கடனை அடைக்கமுடியவில்லை என்று ஏற்கனவே முன்பு ஒருமுறை திவால் நோட்டீஸ் கொடுத்தவர்.. இந்திய அரசியலமைப்பின் 102-(1)c பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாநிலச் சட்டமன்றங்களின் உறுப்பினராகவோ ஆகமுடியாது என்று ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்ய, திகைத்துப் போனார் எம்.ஜி.ஆர்.

வெண்ணிற ஆடை நிர்மலா - எம்.ஜி.ஆர்
வெண்ணிற ஆடை நிர்மலா – எம்.ஜி.ஆர்

ஆனாலும் எம்.ஜி.ஆர். நினைத்ததை முடிக்கும் முயற்சியை விட்டு விடவில்லை. நிர்மலாவின் கடன்களை அடைப்பதற்காக அ.தி.மு.க. கட்சி நிதியிலிருந்து 4,65,000 ரூபாயைக் கடனாக நிர்மலாவுக்கு அளித்தார் எம்.ஜி.ஆர். உடனே நீதிபதி, நிர்மலாவின் மேலவை நியமனத்தை ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தார். எம்.ஜி.ஆருக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆனால், பிரச்சினை ஆளுநர் குரானா வடிவத்தில் வந்தது. “திவாலான ஒருவரது வேட்பு மனு எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது..?” என்று எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டார் ஆளுநர் குரானா. இந்த விளக்கத்தால் கடுப்பாகிப் போனார் எம்.ஜி.ஆர். இந்நிலையில் வெண்ணிற ஆடை நிர்மலா சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்கமுடியாது என்று அறிவித்தார்.

தான் நினைத்தபடி வெண்ணிற ஆடை நிர்மலாவை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்ட எம்.ஜி.ஆர். சட்டமன்ற மேலவையை ஒரேயடியாகக் கலைத்து, உத்தரவு ஒன்றைப், போட்டார்.. ஆகஸ்ட் 30,1986இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நவம்பர்1, 1986இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது.

இந்த வரலாறு திவாலானவருக்குச் சட்டப்படியான எந்த உரிமையும் சமூகத்தில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைத் திவாலானவர் என்று அமலாக்கத்துறை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஒருவேளை அமலாக்கத்துறை அப்படிப்பட்ட அறிவிப்பை அறிவித்தால் டிடிவி தினகரன் எதிர்காலம் முற்றிலும் முடங்கிப்போகும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அரசியல் களத்திலிருந்து டிடிவி தினகரன் அப்புறப்படுத்தப்படும் நிலையும் ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.