திருச்சி பெரியார் மணியம்மை பள்ளிகள் நடத்திய annual sports meet 2023 !

0

திருச்சி பெரியார் மணியம்மை பள்ளிகள் நடத்திய annual sports meet 2023 !

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய annual sports meet 2023.

திருச்சி கே.கே.நகர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விளையாட்டுவிழா 26.08.2023 காலை 8 மணி அளவில் நடைபெற்றது.

annual sports meet 2023.
annual sports meet 2023.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர் K.K.நகர் காவல்துறை உதவி ஆணையர் வி. சுரேஷ்குமார் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கியும் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளக்கு பரிசுகள் வழங்கியும் பாராட்டினார். மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் திருமதி. வேலுமணி வெங்கடாசலம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் செயலாளரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளருமான வி.அன்புராஜ் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வனிதா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் மாணவ மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

விளையாட்டு, நடனம், வீர விளையாட்டு உள்ளிட்ட சாகசங்களை நடத்தி காட்டி நெகிழ்ச்சி அடைய செய்தனர் திரளான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.