சீனியும் வேணாம் ! சர்க்கரையும் வேணாம் ! அக்கறைல சொல்றேன் !

1
சர்க்கரை நோயாளிகள் சீனியை விட்டு நாட்டு சர்க்கரை போட்டு டீ காபி பருகிவருகின்றனர்
நம்ம சுகர் பேஷண்ட்ங்களுக்கெல்லாம் யாரு சொல்றானு தெரியல..
கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

எல்லா டீ கடைலையும் நாட்டு சர்க்கரை கிடைக்குதாம்
கேக்குற பாக்குற எல்லா சுகர் நோயர்களும் நாங்க சீனிய டைவர்ஸ் பண்ணிட்டு
நாட்டு சர்க்கரை கூட செட்டில் ஆகிட்டோம்ங்குறாங்க…

- Advertisement -

ஐயா..
சீனி எதுல இருந்து வருதுனு யோசிங்க..
இந்த நாட்டு சர்க்கரை எதுல இருந்து வருதுனு யோசிங்க…
ஒரு அம்மாகிட்ட கேட்டேன்
சீனி எதுல இருந்துமா வருது?
கரும்புல இருந்து னு சொன்னாங்க..
நாட்டு சர்க்கரை எதுல இருந்து மா வருதுனு? திரும்ப கேட்டேன்
அதுவும் கரும்புனு தான் நினைக்கிறேன்னு கரெக்ட்டா சொன்னாங்க..
நான் சொன்னேன்..
நாட்டு சர்க்கரைக்கு பாலிஷ் போட்டு தான் சீனி வருது.
எப்டி கோதுமைக்கு பாலிஷ் போட்டு மைதா வருதோ அது மாதிரி.
சீனி தப்புனா
சர்க்க்ரையும் தப்பு தான்.
மைதா தப்புனா
கோதுமையும் தப்புதான்.
இனிமே யாராச்சும் உங்களுக்குத் தெரிஞ்ச நீரிழிவு நோயர் நாட்டு சர்க்கரை போட்டு டீ குடிக்கிறத பார்த்தா இந்த கேள்விய கேளுங்க
ஏற்கனவே பத்திக்கிட்டு எரியிற குடிசைல
பெட்ரோல ஊத்துறது தப்பா தப்பில்லையா?
அதுக்கு அவரு பெட்ரோல் ஊத்துறது தப்புத்தான்னு சொல்லுவாரு
திரும்ப கேளுங்க அப்ப டீசல ஊத்தி அணைக்கலாமா? னு கேளுங்க..
4 bismi svs
அவரு “அது எப்டி முடியும்.. டீசல் ஊத்துனாலும் தீ பத்திக்கிட்டு எரியுமே” என்று கூறுவார்
உடனே அவரை மடக்கி ஏனய்யா…
சீனிக்கு பதிலா நாட்டு சர்க்கரைய போட்டு டீ குடிச்சு அதே வேலையதானய்யா நீ செஞ்சுக்குட்ருக்க… என்று பதமாக சொல்லுங்க…
சீனியும் வேணாம்
சர்க்கரையும் வேணாம்
அக்கறைல சொல்றேன்
கேட்டுக்கோங்க மக்களே
இதுல ஒரு க்ரூப்பு இருக்காங்க
இவுங்களுக்கு இனிப்பு ( சீனி / சர்க்கரை ) போடாம டீ குடிங்கனு சொன்னா
அத போடாம குடிக்கிறதுக்கு நாங்க டீயே குடிக்காம இருந்துடுவோம்ங்கறாங்க
நான் டீ க்கு இனிப்பு சேர்த்து குடிக்காதீங்கனு சொன்னது
டீயே குடிக்காதீங்கனு உங்களுக்கு கேக்குதுனா
நீங்க டீ க்கு அடிமையில்ல
அதுல கலந்துருக்குற இனிப்புக்குத் தான் அடிமை
டீ குடிப்பது அதில் இருக்கும் கெஃபெய்னுக்காக
கெஃபெய்ன் ரத்தத்தில் கலந்து மூளைக்கு செல்லும் போது புத்துணர்வு ஏற்படும்
இனிப்பு சுவை தரும் சீனி/ நாட்டு சர்க்கரை போன்றவற்றை சேர்த்து பருகும் போது அதில் இருந்தும் ஒரு ஹை கிடைக்கும்
நம்ம மூளை எது எதுக்கெல்லாம் அடிமை பாத்தீங்களா?
டீ / காபி இதெல்லாம் நம்ம வாழ கட்டாயம் கிடையாது
இருந்தாலும் வேலை செய்யும் போது ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும்
இதை இனிப்பில்லாம பால் இல்லாம
வர காப்பி / வர டீ யாகவும் பருகலாம்
அதே எஃபெக்ட் கிடைக்கும்
ஆனால் அதை நாம பருக மாட்டோம்
காரணம் அது இனிப்பா இல்லங்குற ஒரே காரணம் தான்
தினசரி நீங்க எத்தனை டீ /காபி இனிப்பு போட்டு குடிக்கிறீங்களோ
அத்தனை சீக்கிரமா நீரிழிவு உங்கள
நெருங்கி வரும்
எனவே இன்றே
டீ/காபியில் இனிப்பைத் ( சீனி /நாட்டு சர்க்கரை) தவிர்ப்போம்
நாளைய நீரிழிவை தவிர்ப்போம்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
5 national kavi
1 Comment
  1. Komagan says

    அருமை, சீனியும் வேண்டாம், நாட்டு சக்கரையும் வேண்டாம்….

Leave A Reply

Your email address will not be published.