திருச்சி புத்தகத் திருவிழா 2026 ? எப்படி இருக்கு ? வாசகர்கள் என்ன சொல்றாங்க ?

நம்ம திருச்சியில் நான்காவது ஆண்டாக, நடைபெறும் திருச்சி புத்தகத் திருவிழா 2026, நாளையோடு (பிப்-22) நிறைவடையப் போகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள, வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்றுவரும், திருச்சி புத்தக திருவிழாவில் பெருமளவில் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பங்கேற்று வருகிறார்கள்.

பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர்களும், இல்லத்தரசிகளும், குடும்பத்தோடு திருவிழாவில் பங்கேற்க எப்போதும் வார இறுதி நாட்களைத்தான் தேர்வு செய்வார்கள். இன்று (பிப்-21) சனிக்கிழமை மாலை முதல் நாளை (பிப்-22) ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி வரையில்தான் நேரம் இன்னும் மிச்சமிருக்கிறது. கடைசி நேர நெரிசலை தவிர்க்க, இப்போதே தயாராகிவிட்டீர்கள் தானே?

அரங்கு எண்: 66 இல் அங்குசம் வெளியீடுகள் வாசகர்களாகிய உங்களை அன்போடு வரவேற்கிறது.

திருச்சி புத்தகத் திருவிழா 2026 இல் இதுவரை பங்கேற்றவர்களின் அனுபவங்களை நேர்காணல் செய்திருக்கிறார்கள், எமது செய்தியாளர் குழு. வாசகர்கள் என்ன சொல்றாங்க ? கேட்டுப்பாருங்களேன் !

வாங்கலானா கூட பரவாயில்ல… வந்து பாருங்க ! திருச்சி புத்தக திருவிழா 2026

அங்குசம் புத்தக அரங்கில் மணப்பாறை பள்ளி மாணவர்கள் !

அங்குசம் புத்தக அரங்கில் திருவாரூர் காரர் ! திருச்சி புத்தகத் திருவிழா !

திருச்சி புத்தகத் திருவிழாவில் அங்குசம் வெளியீடு

First Standard குட்டீஸ்களின் க்யூட் இன்டர்வ்யூ

Comments are closed, but trackbacks and pingbacks are open.