அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் செய்திகள் எதிரொலி ; அதிரடி காட்டிய திருச்சி காவல்துறை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் செய்திகள் எதிரொலி ; அதிரடி காட்டிய காவல்துறை

இந்தப் பெயர் சொன்னா கஞ்சா கிடைக்கும், போதையில் தள்ளாடும் திருச்சி என்ற தலைப்பில் அங்குசம் மின்னிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மாநகரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனையைத் தடுக்க சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநகர் முழுவதும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் 1½ கிலோ தடை கஞ்சா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த காஜா பேட்டையை சேர்ந்த அம்மாவாசை, மில் காலனியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் மூல தொப்பை சேர்ந்த ஐயப்பன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் ஒன்னரை கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து அதிரடி காட்டி இருக்கிறது திருச்சி மாநகர காவல்துறை.

இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த திருச்சி மாநகர காவல்துறை எடுத்திருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை சிறப்புக்குரியது. மேலும் இதில் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.