உரிமைகளை மீட்டெடுக்க, ஒன்றுகூடிய மாற்றுத் திறனாளிகள் !
”மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றக் கழகம் கட்சி”யின் சார்பில், கடந்த ஆக-09 அன்று திருச்சியில் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். நாகமங்கலம் ஜெரிகோ மேல்நிலைப் பள்ளியில், சாமுவேல் ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
நிர்வாகி எம். பாண்டியன் வரவேற்று பேசினார். சிவகங்கை செந்தில்குமார் கட்சியின் தொடக்கம், அதன் நோக்கம், கொள்கை குறித்து எடுத்துரைத்தார். ஜார்ஜ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். யாரையெல்லாம் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும் என்பது குறித்து திருச்சி செந்தில்குமார் உரையாற்றினார். திருச்சி முத்துக்குமார் நன்றியுரையுடன் கூட்டம் முடிவு பெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலனில் இருந்து நியமன உறுப்பினர்கள் அறிவிப்பு உள்ளிட்ட அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மீட்டெடுக்கப்படுவது குறித்த, கலந்தாய்வு கூட்டமாக அமைந்தது, இந்நிகழ்வு.