திருச்சி மாவட்ட ஆயுதப்படையை காவலர்கள் தடகள போட்டிகளில் சாதனை !
டெல்லியில் நடைபெற்ற 73 வது அகில இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் மத்திய மண்டலத்தை சேர்ந்த காவலர்கள் வெற்றி பெற்று பதக்கம் பெற்றது தொடர்பாக.
டெல்லியில் நடைபெற்ற 73 அகில வது இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரியம் காவலர் 1623 சி. சுந்தர். என்பவர் Triple Jump போட்டியில் கலந்து கொண்டு 7-ம் இடத்தை பெற்றுள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கமும், ரூபாய் முன்று இலட்சம் ரொக்க பரிசும் வென்றுள்ளார் மேலும் 2019 ஆம் ஆண்டு வெண்கல பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது. மேற்படி பரிசு தொகையானது. தற்போது டெல்லியில் நடைபெற்ற 73 வது அகில இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டியின் போது அளிக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற 73 வது அகில இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் 1583 ச. அரவிந்த் என்பவர் 110 Meters Hurdles போட்டியில் பங்கு பெற்று 5ஆம் இடத்தையும், அரியலூர் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் 1389 குழந்தைவேலு என்பவர் குண்டு எறிதல் போட்டியில் 12வது இடமும் மற்றும் திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் 2888 தர்ஷன் என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் 17வது இடமும் பெற்றுள்ளார்கள்.
வெற்றி பெற்ற காவலர்களுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. க. கார்த்திகேயன். இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.