திருச்சி பழைய கோயில் கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம் நடத்திய கண் மருத்துவ முகாம் !
திருச்சி, பழைய கோயில் கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம் ஜோசப் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச சிறப்பு கண் பரிசோதனை மருத்துவ முகாமை நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த ஆக-09 அன்று, திருச்சி பாலக்கரை பழைய கோயில் அருகே உள்ள புனித வியாகுல அன்னை ஆலய மண்டபத்தில் நடைபெற்ற, இந்நிகழ்வை பழைய கோயில் பங்கு தந்தை டி.தாமஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். பழைய கோயில் உதவி பங்கு தந்தை ஜெ.ஜோசப் விஜய் முன்னிலையில், மேலப்புதூர் நல்லாயன் நிலையம் இயக்குனர் பங்குத்தந்தை எஸ்.அம்புரோஸ் ஆசியுரை வழங்கினார்.

பழைய கோயில் தொழிலாளர் இயக்க தலைவர் ஆரோக்கியராஜ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக அரியமங்கலம் மண்டலம் தலைவர் பி.ஜெயா நிர்மலா, ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு, டி.எல்.சி மாநில பொருளாளர் எஸ். ஞானப்பிரகாசம், கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கத்தின் மறை மாவட்ட தலைவர் பி. ஜெஸ்டின் செயலாளர், டி.நெஸ்டர் அடைக்கலராஜ் பழைய கோயில் தொழிலாளர் இயக்க துணைத் தலைவர் ஞானசேகர் செயலாளர், சி. ஜெரால்டு பொருளாளர் ஜே. ஜான் போஸ்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாலக்கரை பகுதியை சேர்ந்த பெருவாரியான பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று கண் பரிசோதனை தொடர்பான ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.
— ரூபன் ஜி