திருச்சி அரசு மருத்துவமனையின் வசதிகளும் ; நோயாளிகளின் பரிதாபங்களும்! வீடியோ பேட்டி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக உயிருடன் இருந்த நபரின் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

வீடியோ லிங்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு இருந்து வந்தது. மேலும் இவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதை அடுத்து மகனின் நிலையை பார்த்து வைத்தீஸ்வரன் தாய் பார்வதி தனது சிறுநீரகத்தை தனது மகனுக்கு தர சம்மதித்தார். இதையடுத்து அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகும் இந்த வகை அறுவை சிகிச்சையை, திருச்சி அரசு மருத்துவமனை இலவசமாக செய்து இருக்கிறது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அரசு மருத்துவமனையில் நோயாளி கேட்கும் மருந்து இல்லை என்று பணியாளர் கூறிய காட்சி

இப்படி திருச்சி அரசு மருத்துவமனையில் பல சாதனைகள் அவ்வப்போது நடத்திக் கொண்டு இருந்தாலும். சில வேதனைகளும் அரங்கேறிய வண்ணம் தான் இருக்கின்றன. திருச்சி மாவட்டம் பீமநகர் மாசிங்பேடை பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையின் மூலம் சிறுநீரக நோய்க்கான மருந்துகளை ஆரம்பத்தில் பெற்றிருக்கிறார். பிறகு பத்மநாபனுக்கு வழங்கப்படும் மருந்துகள் மருத்துவமனை நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை, பிறகு வாருங்கள், தற்போது ஸ்டாக் இல்லை, அடுத்த வாரம் வந்து பெற்றுக் கொள்ளவும் என்றெல்லாம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இடம் புகார் அளித்தார், புகாரின் பேரில் பத்மநாபனுக்கு தேவையான மருந்துகளை அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக உத்தரவிடப்பட்டது.

வீடியோ லிங்

 

ஆனாலும் தொடர்ந்து அரசு மருத்துவமனை நிர்வாகம் மருந்துகளை கொடுக்காமல் தவிர்த்து வந்தது. இதையடுத்து பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவுச் செய்தார். அந்த வழக்கில் திருச்சி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் சிறுநீரக நோய்க்கான மாத்திரைகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். இதையடுத்து 23.2 2021 அன்று மதுரை உயர்நீதிமன்றம் பத்மநாபனுக்கு சிறுநீரக நோய்க்கான மூன்று மருந்துகளையும் வழங்க உத்தரவிட்டது. உத்தரவு வந்து பல மாதங்களாகியும் இன்றுவரை சிறுநீரக நோய்க்கான மருந்து அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்தால் தனக்கு வழங்கப்படவில்லை என்று பத்மநாபன் குற்றம் சாட்டுகிறார்.

வீடியோ லிங்

ஒருபுறம் அரசு பொது மருத்துவமனை சாதனைகளைப் புரிந்து கொண்டிருந்தாலும் சில வேதனைகளும் மக்களுக்கு நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்கும் மருத்துவமனை நிர்வாகம், மருந்துகளைத் தர தவறுவது ஏன். திருச்சிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று ஒரு காலத்தில் பேசப்பட்டாலும் பிறகு அது மதுரைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதேநேரம் திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கு பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

தனியார் மருத்துவமனைகள் அதிகரிக்கும் அதே வேளையில் தான் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, மேலும் படிக்கும் மாணவர்கள் தான் பெரும்பாலான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர் என்று நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுமட்டுமல்லாது மருந்துகளில் பற்றாக்குறை போன்றவை தனியார் மருத்துவமனையை நோக்கி மக்களை திசை திருப்புவதற்கான வழியா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பல நோய்களுக்கான மருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சரிவர கிடைக்கவில்லை என்றும் பல மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வீடியோ லிங்

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீனிடம் கேட்டதற்கு, பத்மநாபன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, அரசு மருத்துவமனை மூலமாக மருந்துகளை வாங்கி வருகிறார். அவர் கேட்கும் மருந்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் இல்லை. மேலும் கோர்ட் ஆர்டர் பெற்று வந்ததால், அதை மதித்து மருத்துவமனை இன்சூரன்ஸ் மூலமாக மருந்துகளை வாங்கி 6 மாதத்திற்கான மருந்துகளைக் கொடுத்தோம். அரசு மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, அரசுக்கு கோரிக்கை விடுத்து அவர் மருந்துகளை பெற முயற்சி செய்ய வேண்டும். மேலும் மற்ற அனைத்து வகையான மருந்துகளும் திருச்சி அரசு மருத்துவமனையிடம் இருப்பு இருப்பதாகவும், அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து அங்குசம் செய்தி நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டபோது கசப்பான அனுபவங்களே கிடைத்தன.

நோயாளிகள் பலரும் தங்களுடைய ஆர்டர்களை வைத்துக்கொண்டு மருந்துக்காக காத்திருந்தும் மருந்துகள் இல்லை என்றே மருத்துவமனை நிர்வாகத்திடம்  இருந்து பதில் கிடைத்தது.

அதற்கான வீடியோ ஆதாரங்கள் செய்தியின் லிங்காக இணைக்கப்பட்டிருக்கிறது.

இதன்  மூலம் மருத்துவமனை டீன் கூறிய கருத்துக்கு நேர் எதிராகத்தாக தான் மருத்துவமனையின் நிலை உள்ளது என்பதை இது காட்டுகிறது.

பின்குறிப்பு.

அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் லிஃப்ட் கடந்த 3 நாட்களாக இயங்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

 

வீடியோ லிங்

எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் அரசு மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும், மேலும் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் சிறிய குறைபாடுகள் கூட நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.