பொதுச் செயலாளராகும் பிரேமலதா -தேமுதிகவின் நடைபெறும் மாற்றம்?
தேமுதிக தொடங்கப்பட்டதிலிருந்தே நிறுவனர் மற்றும் தலைவர் என்ற இரண்டு பொறுப்புகளை விஜயகாந்த் வகித்து வருகிறார். மற்ற பொறுப்புகள் புதிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இப்படி தேமுதிகவின் பொதுச்செயலாளராக இருந்த ராமு வசந்தன் மறைவுக்குப் பிறகு பொதுச் செயலாளர் பொறுப்பையும் விஜயகாந்த் தன்வசம் ஆக்கிக் கொண்டார்.
விஜயகாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்ட பிறகு தேமுதிகவின் பொருளாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டார். மேலும் பிரேமலதாவின் தம்பி சுதிஸ் துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
அதேநேரம் தேமுதிக நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த வண்ணம் இருந்தது. இதனால் நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகத் தொடங்கினர். விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தீவிர அரசியலில் அவரால் பணியாற்ற முடியவில்லை, இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டார். எப்படி விஜயகாந்த் குடும்பம் தேமுதிகவை வலிமைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாளும் கட்சியின் மூன்று முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்து வரும் விஜயகாந்தால் தீவிர அரசியலில் செயல்படாத முடியாததாலும், பிரேமலதா வசம் இருக்கக்கூடிய பொருளாளர் பதவியை வைத்துக்கொண்டு கட்சியில் எந்தவித முடிவையும் அவரால் எடுக்க முடியாத காரணத்தாலும், பொது செயலாளர் பதவிக்கு பிரேமலதா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் பிரேமலதாவை பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று பேசப்பட்டு உள்ளது.
விரைவில் தேமுதிகவின் பொதுச் செயலாளராகவும் பிரேமலதா அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேமுதிகவின் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.