பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழைப்பு போரை முடிவுக்கு கொண்டு வா !
ஐக்கிய நாடுகளின் சபையே…!
சர்வதேச நீதிமன்றமே….!
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழைப்பு போரை முடிவுக்கு கொண்டு வா….
62,000 காசா மக்களை 19,000 குழந்தைகளை கொன்றொளிகத்த போர் வெறியன் நெதன்யாகுவை தூக்கிலிடு…!
போன்ற முழக்கங்களை முன்வைத்து 25.08.25 திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் மக்கள் கலை இலக்கிய கழகம் தலைமையில் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் இயக்கங்கள் முன்னிலையில்.. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திடலில்… பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக கொல்லப்படும் மற்றும் கொடும் சித்திரவதைகளுக்குள் ஆளாக்கப்பட்டு வருவதை சித்தரிக்கின்ற வகையில் குழந்தைகள் ஆண்கள், பெண்களென கட்டிட இடுப்பாடுகளில் இருந்து தப்பித்து… கொத்து குண்டுகளில் இருந்து உயிர் பிழைத்து… தங்கள் வாழ்க்கையையும் உறவினர்களையும் தொலைத்த பாலஸ்தீன மக்களை ஆட்சி படிமமாக ஆர்ப்பாட்ட மேடையில் அரங்கேற்றினோம்…