அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கட்டுமான பணிகள் தீவிரம்! ஜனவரி இறுதிக்குள் திறப்பு! -அமைச்சா் தகவல்

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வளாகத்தின் அருகே சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு ஆம்னி பஸ் நிலையம் ரூ. 17.60 கோடியில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இன்று வரை 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இதில் மூன்று பேருந்து நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் 58 பஸ்கள் மொத்தமாக நிறுத்தலாம்.34 எண்ணிக்கையில் பேருந்து நிறுத்த தடங்கள் உள்ளது.இந்த பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

2026 June 11 - 17 Angusam Book

தொடர்ந்து பஞ்சபூர் ஒருங்கிணைந்த  பேருந்து நிலைய வளாகத்தின் அருகே சுமார் 5.20 ஏக்கர் பரப்பளவில் பல்நோக்கு பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மைய கட்டிடம் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நிதி மாநில நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் மாநகராட்சி நிதியின் கீழ் ரூ.144.58 கோடியில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இன்று வரை இந்த பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.இந்த பணிகளையும் அமைச்சர் கே என் நேரு இன்று அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.அப்போது இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டுமானப் பணிகளையும் இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் புதிய காய்கறி அங்காடி திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மாநராட்சி மேயர் அன்பழகன்,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி ஆணையர்மதுபாலன்,நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி ஆனையர் சண்முகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.