அங்குசம் சேனலில் இணைய

கோவிலில் வைத்து கொடூர கொலை! கணவருக்கு ஆயுள் தண்டனை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மேல சீதேவிமங்கலம், தெற்கு தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி புல்லட் ராஜா (எ) நளராஜா 40/22, த.பெ பரமசிவம் (HS No.11/22. Category A) என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி 35/22 என்பவரிடம், மண்ணச்சநல்லூர் காலனியை சேர்ந்த சின்ராசு 38/22 த.பெ ராமசாமி என்பவர் தவறான உறவு முறையில் இருந்து வந்ததாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மேற்படி 1) புல்லட் ராஜா (எ) நளராஜா 40/22 த.பெ ராமசாமி, 2) கிருஷ்ணவேணி 35/22 க.பெ புல்லட் ராஜா (எ) நளராஜா. 3) ஷேக் அப்துல்லா 42/22 த.பெ ஜமாலுதீன் மற்றும் 4) அப்துல் கனி 26/22 த.பெ அப்துல் ரஹ்மான் ஆகியோர் திட்டமிட்டு, மேற்படி சின்ராசை 29.10.2022 அன்று 20.15 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் முடிமண்டபம் அருகே வரவழைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி இறந்து போன சின்ராசு என்பவரின் சகோதரர் சரவணன் 45/25 என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி எதிரிகள் மீது சமயபுரம் காவல் நிலைய குற்ற எண். 276/22, U/s 341, 302 IPC- ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

புல்லட் ராஜா (எ) நளராஜா
புல்லட் ராஜா (எ) நளராஜா

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (11.08.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II)  எதிரி-1 புல்லட் ராஜா (எ) நளராஜா 40/22, த.பெ பரமசிவம் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய். 10000 அபராதமும், எதிரி-2 கிருஷ்ணவேணி 35/22 க.பெ புல்லட் ராஜா (எ) நளராஜா மற்றும் எதிரி-4 அப்துல் கனி 26/22 த.பெ அப்துல் ரஹ்மான் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார். எதிரி-3 ஷேக் அப்துல்லா 42/22 த.பெ ஜமாலுதீன் இறந்துவிட்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராமன் மற்றும் சமயபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் விக்னேஷ் ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப  வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.