இரயில்வே சீசன் டிக்கெட்டை முறையை மாற்றும் திருச்சி இரயில்வே நிர்வாகம் – பொதுமக்கள் பாதிப்பு!
திருச்சி புறநகர் பகுதிகளான மணப்பாறை, லால்குடி, துவாக்குடி, கீரனூர் போன்ற பகுதிகளிலிருந்து தினம்தோறும் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் திருச்சிக்கு பணிக்காக, குறிப்பாக கட்டிட பணிக்காக வருகிறார்கள். அதே போன்று திருச்சியிலிருந்தும் அருகாமையிலுள்ள ஊர்களுக்கு பணி விஷயமாக தினம்தோறும் ஆயிரகணக்கானோர் இரயிலில் சென்று வருகிறார்கள்.
இவ்வாறு தினம்தோறும் இரயில்களில் சென்று வரும் தொழிலாளர்கள் வரிசையில் தினம்தோறும் டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக, சலுகை விலையில் சீசன் டிக்கெட்டை இரயில்வே கவுன்டர்களில் மாதம் ஒரு முறை எடுத்துகொள்ளும் வசதியை இரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தற்பொழுது திருச்சி இரயில்வே ஜங்ஷனிலுள்ள இரயில்வே கவுன்டர்களில் இந்த சீசன் டிக்கெட்டை பணம் கட்டி பெறமுடியவில்லை என்றும், அதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது இரயில்வே தனியார் ஏஜென்ட் மூலமாக சீசன் டிக்கெட்டை பெற்றுகொள்ள அறிவுறுத்தப்படுவதாக பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
மேலும் ஆன்ராயிடு போன் வைத்துள்ள இரயில்வே பிரயாணி தனது போன் மூலமாக சீசன் டிக்கெட்டை எளிதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறமுடியும். ஆனால் போனேயில்லாத அல்லது பட்டன் போன் வைத்துள்ள படிப்பறிவுயில்லாத, வயதான பிரயாணி எப்படி சீசன் டிக்கெட்டை விண்ணப்பப்பது…..?
மேலும் இரயிலில் கட்டணம் குறைவு என்று தான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள். அப்படிபட்ட தனது வாழ்வாதாரத்திற்காக தினமும் இரயிலில் பயணம் செய்யும் தொழிலாளியை தனியார் ஏஜெட்டிடம் விண்ணப்பிக்க சொன்னால், தனியார் ஆன்லைனுக்காக கூடுதல் கட்டணம் அந்த தொழிலாளிக்கு கூடுதல் செலவாக தான் முடியும்.
எனவே அனைத்தும் ஆன்லைன் மயம் என சிந்திக்கும் இரயில்வே சிந்தனைவாதிகள். இந்த நாட்டில் குடிமக்கள் உணவுக்கு வழியில்லாமலும், வீடு போன்ற எந்தவித அடிப்படையுமில்லாத ஏழை, எளிய மக்களுக்காகவும் குறைந்தபட்சம் சிந்தித்து திருச்சி இரயில்வே ஜங்ஷன் டிக்கெட் கவுன்டர்களில் இதற்கு முன்பு சீசன் டிக்கெட்டிற்கான விண்ணப்பத்தை பெற்று சீசன் டிக்கெட்டை கொடுத்த முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.