அச்சுறுத்திய ரவுடிகள் அடுத்தடுத்து கைது ! திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு 5 தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 16.03.2024-ம் தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 8 ரவுடிகளில் A+ வகை ரவுடியான சங்கர் (எ) வெட்டு சங்கர் மீது வழிப்பறி மற்றும் ஆயுத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

A வகை ரவுடிகளான முயல் கார்த்திக் (எ) கார்த்திக் மீது வழிப்பறி மற்றும் ஆயுத வழக்கும், திருச்சி மாநரகம் சரித்திர பதிவேடு போக்கிரியான சதீஷ்குமார் மீது வழிப்பறி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

B வகை ரவுடிகளான ரவி போஸ்கோ (எ) போஸ்கோ மீது திருட்டு வழக்கும் மற்றும் சந்தோஷ் மீது கொடுங்காய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

B வகை ரவுடிகளான சுரேஷ் (எ) குளித்தலை சுரேஷ் மீது கஞ்சா வழக்கும், மணிவண்ணன் (எ) மணி மீது வழிப்பறி வழக்கும், சந்தோஷ் மீது கொடுங்காய வழக்கும் பதிவு செய்யப்பட்டு, அனைத்து வழக்குகளிலும் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைத்து ரவுடிகளும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில்,  தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா 22.3 கிராமும், குட்கா பொருட்கள் 136.6 கிலோ கிராமும், 276,2 லிட்டர் மதுபான வகைகளும், கள்- 346 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பல்வேறு கட்சியினர் மீது 11 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகன விதிமீறல் தொடர்பாக 12723 வழக்குகளும், ரூ.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மேற்பார்வையில், Static Surveillance Team (SST) – 19, Flying Squad Team (FST) 19, சோதனைச் சாவடிகள் 15 அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், மேற்பார்வையில், 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 11 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 37 காவல் ஆய்வாளர்கள், 253 உதவி ஆய்வாளர்கள், 1292 காவலர்களும் மற்றும் 267 துணை ராணுவப்படையினரும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் தொலைபேசி- 9487464651 என்ற எண்ணில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.