பொரியில கலந்த கடலை மாதிரி பாஜக கூட்டணி – கூல் சுரேஷ் கூலான பிரச்சாரம் !

அ.தி.மு.க.விடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து கடும் முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள்எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வளரவிடாதீர்கள் - அமைச்சர் எ.வ. வேலு அட்வைஸ்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொரியில கலந்த கடலை மாதிரி பாஜக கூட்டணி – கூல் சுரேஷ் கூலான பிரச்சாரம் !

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் அண்ணாதுரை மீண்டும் களம் காண்கிறார். பாஜக வேட்பாளர் கள்ளக்குறிச்சி அஸ்வத்தாமனும், அதிமுக சார்பில் கலியபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர் புதிய முகம் என்பதால் திருவண்ணாமலை நகரில் உள்ளவர்களுக்கே இவரை தெரியவில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

முன்னதாக, பாஜக கூட்டணியில் அக்கட்சியின் மாநில செயலாளர்களில் ஒருவரும் டிவி விவாதங்களில் பங்கேற்பவருமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் செங்கம் தொகுதிக்குட்பட்ட சாத்தனூரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு பூ பொட்டு கற்பூரம் காட்டி வழிபட்டு  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை ஆதரித்து   நடிகர் கூல் சுரேஷ் செங்கத்தில் பஞ்ச் டயலாக் பேசி காமெடி கலாட்டா என பிரச்சாரத்தில் அசரடித்து வருகிறார்.

செங்கம் பகுதியில் பிரசாரம் செய்த கூல் சுரேஷ், செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்புகளை  தைத்து பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்டு  ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பிக் கொண்டு அருகில் உள்ள தர்பூசணி, ஐஸ்கிரீம், பழம் விற்பனையாளரிடம் சென்று அவற்றின் விற்பனையாளர் போல கூவி கூவி  அழைத்தும் யாரும் வராததால் அவரோடு வந்தவர்களுக்கே விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அருகில் உள்ள காய்கறி கடைகளிலும், நுழைந்து விற்பனை செய்தவர், பொரிகடையில், பொரி வாங்குவதற்காக ஒருவர் வந்தார், அவரிடம், ”இந்த பொரியில் கடலை உள்ளிட்ட சத்தான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன. அதுமாதிரிதான் பாஜக கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல பல கட்சிகள் உள்ளன.” அந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

 

பிறகு, பூ விற்பதற்காக பூக்கடைக்குள் நுழைந்தார். ஆனால், அந்த நேரம்பார்த்து யாருமே பூ வாங்க வரவில்லை.. இவரோடு  பிரச்சாரத்துக்கு வந்திருந்த பாஜக நிர்வாகி ஒருவர், சட்டென கஸ்டமராக மாறி, பூ விலை எவ்வளவுங்க? என்று கேட்டார். ”இப்ப 100 ரூபாய்க்கு விற்கும் ஒரு முழம், பாஜக ஜெயிச்சா 25 ரூபாய்க்கு விற்கப்படும். பாஜக ஆட்சியிலே எல்லாமே நியாயமான விலைதான்” என்று  பாஜகவுக்கே தெரியாமல் புது வாக்குறுதியை தூக்கி போட்டார்.

தெருவுக்குள்  நுழைந்து ஓட்டு கேட்க சென்ற இடத்தில் அங்கிருந்த ஒரு அக்கா,  டீ கொண்டு வந்து கொடுத்தார். “அக்கா, இது வெறும் டீ கிடையாது, இந்த டீயில் அன்பு, பண்பு, பாசம் எல்லாவற்றையும் கலந்து தந்திருக்கீங்க” என்று சொல்லி டீயை வாங்கி குடித்த கூல் சுரேஷ், “வெந்து தணிந்தது காடு – அக்காவுக்கு ஒரு ஓ  போடு” என்று தன்னுடைய பஞ்ச் சொல்லிக் கொண்டிருந்தபோதே அந்த வழியாக ஒரு டவுன் பஸ்ஸில் மாணவர்களும், இளைஞர்களும் தொங்கியபடி சென்றார்கள். இதனை பார்த்த கூல் சுரேஷ், “டேய் டேய் தொங்காதீங்கடா.. தொங்காதீங்கடா.. உங்கள் வாழ்க்கை முக்கியம்.. உங்க அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் உங்க வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், தொங்காதீங்கடா பசங்களா” என  அட்வைஸ் செய்தார். இப்படி திருவண்ணாமலை பாஜகவினர் தினுசு தினுசாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், திமுக பாஜகவுக்குதான் இங்கு போட்டியே என்று அமைச்சர் எ.வ.வேலுக்கே சந்தேகம் வந்துவிட்டது போல!

தி.மு.க. வேட்பாளர் அண்ணாத்துரைக்கு ஆதரவாக தனது சொந்த தொகுதியான திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பாஜகவின் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். அண்ணாமலையார் கோவிலை ஆன்மீக மக்களுக்கு ஒப்படைத்த ஆட்சி கலைஞர் ஆட்சி. இப்போது மத்திய தொல்லியல்  துறையிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள் பாஜகவினர். அதற்கெல்லாம் நாங்கள் விட மாட்டோம் என்றவர். அ.தி.மு.க.விடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வளரவிடாதீர்கள். கடும் முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள் 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். என்று அதிமுகவுக்கு அட்வைஸ் செய்ததில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக சென்று விடுமோ என்ற கவலையில் உறைந்துள்ளார்கள் ரத்தத்தின் ரத்தங்கள் !

மணிகண்டன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.