திருச்சியில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றம் !
திருச்சி மாவட்டத்தில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல்களை தெரிவிப்பதற்காக தனிப்பிரிவு போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த தனிப்பிரிவு போலீசார் உரிய நேரத்தில் முன்கூட்டியே தகவல்களை தெரிவித்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையிலும், கஞ்சா, போதைபொருள் கடத்தல் உள்ளிட்ட தகவல்களையும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது வழக்கம்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் வாத்தலை, காட்டுப்புத்தூர், துவாக்குடி, முசிறி, புலிவலம், சோமரசம்பேட்டை நவல்பட்டு, சமயபுரம், கொள்ளிடம், மணிகண்டம், சமயபுரம், ெஜம்புநாதபுரம், தா.பேட்டை, உப்பிலியபுரம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்த 17 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் உடனடியாக தாங்கள் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு பணியில் சேர வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.