திருச்சிக்கு வந்தாச்சு கண் வங்கி ! அப்டேட்ஸ் இல் அசத்தும் ஜோசப் கண் மருத்துவமனை !
திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக ரூபாய் 45 லட்சம் மதிப்பில் ஜோசப் மருத்துவமனையில் கண் வங்கி….
கண் உலகத்தின் திறவுகோல், கண் தானம் வாழ்நாளில் செய்யக்கூடிய சிறந்த தானமாகும். இப்படிப்பட்ட மகத்தான தானத்தை செய்தும் சில நேரங்களில் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தினால் சிறந்த முறையில் சிகிச்சை செய்ய முடியாமல் போகிறது. இதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக ரூபாய் 45 லட்சம் மதிப்பில் ரோட்டரி கண் வங்கி திருச்சி ஜோசப் மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
ரோட்டரி மாவட்டம் 3000 மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் டாக்டர் ஏ.கே.எஸ். சீனிவாசன் நேரடி பங்களிப்பில் இந்த கண் வங்கி அமைப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. TELC பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் ஆசீர்வாதத்துடன், ஜோசப் கண் மருத்துவமனையில் இயக்குனர் டாக்டர் பிரதீபா முன்னிலையில் பன்னாட்டு ரோட்டரி சங்க இயக்குனர் MMM முருகானந்தம் இதனை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ரொட்டேரியன்கள் சீனிவாசன், சுப்பிரமணியன், லியோ பெலிக்ஸ் லூய்ஸ் ,ராஜா, கோவிந்தசாமி , கண்ணன், மாவட்ட ஆளுநர் கார்த்திக், திருச்சபை செயலாளர் தங்கப்பழம், பொருளாளர் ஞானபிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து ரோட்டரி பன்னாட்டு இயக்குனர் MMM முருகானந்தம் கூறும் பொழுது திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையுடன் இணைந்து இதுவரை 50 ஆயிரம் பேருக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் செய்துள்ளோம்.
ஜோசப் கண் மருத்துவமனையுடன் ரோட்டரி இணைந்து நடத்திய அத்தனை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதன் படியே இந்த திட்டத்தையும் ஜோசப் கண் மருத்துவமனையில் அறிமுக படுத்தியுள்ளோம். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பத்தில் தயாரான அதி நவீன 35 லட்சம் மதிப்பிலான கருவி மூலம் கண்களை பரிசோதித்து, சேகரித்து பாதுகாத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்த முடியும்.
மேலும் கண் வங்கிக்கு தேவையான குழு உபகரணங்கள், திருச்சி மாவட்டத்தில் எந்த கண் மருத்துவமனையிலும் இல்லாத அதிநவீன உபகரணங்கள் ஆகியவை திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்துவது பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு தலைமையில் ரோட்டரி நிர்வாகிகள் முகமது தாஜ், லிஸி அசோமுக, சத்ய நாராயணன், ஹனிபா ஷானவாஸ் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
– இரா.சந்திரமோகன்.