செயின்ட் ஜோசப் கல்லூரியின் சுதந்திர தின விழா கிராம சபைக்கூட்டம் !
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாகமங்கலம் சேதுராப்பட்டி இனாம்மாத்தூர் அளுந்தூர் இனாம்குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் சுதந்திர தின விழா அன்று நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படியும் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச உன்னத பாரத இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டோம்னிக் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோரின் ஆலோசனை படி LSDG- Local sustainable development goals
உள்ளூர் அளவிலான நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் என்கின்ற நோக்கோடு முதுநிலை
ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசந்திரன் மற்றும் லெனின் இனாம்மாத்தூரில் பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி வேலை வாய்ப்பு அரசுத் திட்டங்களை தெரியப்படுத்த கல்லூரி சார்பாக எல் இ டி போர்டு ஊராட்சி மன்றத்தில் வைப்பது குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் பற்றியும்

ஒருங்கிணைப்பாளர் யசோதை ஆளுந்தூர் ஊராட்சியில் உன்னத பாரத இயக்கத்தின் கீழ் சிறுகாற்றாலை யாகப்புடையான் பட்டியில் நிறுவப்படுவது பற்றியும் மேலும் நாகமங்கலத்தில் மத்திய அரசின் காப்பீடு திட்டங்கள் பற்றியும்
ஒருங்கிணைப்பாளர் சுதாகர் இனாம்குளத்தூர் ஊராட்சியில் குப்பை சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் இயக்கங்களை ஒழுங்கமைத்தல் மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் பற்றியும்
கல்லூரி மாணவர்கள் சேதுராப்பட்டி மற்றும் நாகமங்கலத்தில் குளம் தூர்வாரும் பணிகள் பற்றியும் மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல் பற்றியும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்
மேலும் எதிர்வரும் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுபுற சுகாதார மேம்பாடு பற்றியும் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல அலுவலர் கிராம நிர்வா அலுவலர்கள் ஊராட்சி மன்ற செயலாளர்கள் கிராம பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மேற்கொண்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன இந்திய அரசமைப்பு சாசனம் மற்றும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.