திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் !
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பொதுமக்கள், பள்ளி / கல்லூரி மாணவ மாணவியர்கள், மற்றும் நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு தகுதி வாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி (Learn to Swim) கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.
முதல் கட்டம் : 01.04.2025 முதல் 13.04.2025 வரை
இரண்டாம் கட்டம் : 15.04.2025 முதல் 27.04.2025 வரை
மூன்றாம் கட்டம் : 29.04.2025 முதல் 11.05.2025 வரை
நான்காம் கட்டம்: 13.05.2025 முதல் 25.05.2025 வரை
ஐந்தாம் கட்டம்: 27.05.2025 முதல் 08.06.2025 வரை
காலை 6.30 மணிமுதல் 9.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும் மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சிக்கானகட்டணம் ரூ.1500/- +GST18% (ஒரு நபருக்கு/ஒருமணி நேரம் 12 நாட்கள் வகுப்பு) Online – POS Machine வாயிலாக செலுத்தப்பட வேண்டும். 8 வயதிற்கு மேற்பட்டவர்கள் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் (வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்).

நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் /ஆண்கள் மற்றும் மாணவியர்கள் / பெண்கள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
காலை 9.30 மணிமுதல் 12.30 வரைமற்றும் பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரைஆண்களுக்கும் மாலை 4.00 மணிமுதல் 5.00 மணிவரைபெண்களுக்கும் தினசரி கூப்பன் முறையில் வழக்கம் போல் நீச்சல் பயிற்சிமேற்கொள்ளலாம். ஒருமணிநேரத்திற்குகட்டணம் ரூ.50 /- + GST 18% (ஒரு நபருக்கு / ஒரு மணி நேரம் மட்டும்)
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.