அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பெண்களிடம் ஆபாசமாக பேசும் கடை முதலாளி! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சியில் பாலாஜி காஸ்மெட்டிக் நிறுவனத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடை முதலாளி! பெண்ணுக்கு ஆதரவாக ஜனநாயக அமைப்புகள்!!

மரக்கடை பகுதியில் பாலாஜி காஸ்மெட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடையில் உள்ள முதலாளி அங்குள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அவர்களை பேசுவது என  தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதை சில பெண்கள் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் அங்கு வேலை செய்கிறார்கள். அப்படி அவர்கள் மீறி வெளியில் சொன்னால் தனக்கு தன் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழந்து நமது குடும்பம் மீண்டும் மோசமான நிலைக்கு மாறிவிடுமோ என  சில பெண்கள் இந்த அயோக்கியனை பற்றி வெளியில் சொல்லாமல் வேலை செய்து வந்தனர்.

இதில் ஒரு பெண் மட்டும் துணிச்சலாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இந்த கடையின் முதலாளி மீது புகார் அளித்தார். புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்கின்ற பெயரில் போலீசார் ஒருதலைப் பட்சமாக கடை முதலாளிக்கு சாதகமாக பேசியது காவல்துறை. மேலும் அக்கடையில் வேலை செய்யும் மற்ற பெண்களிடம் மிரட்டி இப்படி எந்த தவறும் நடக்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கியுள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பெண்ணுக்கு ஆதரவாக ஜனநாயக அமைப்புகள்புகார் கொடுத்த பெண்ணை மீண்டும் காவல்துறையினர் அழைத்து இது பொய் புகார், உடனடியாக புகாரை திரும்ப பெறு என்று அவரை மிரட்டி வந்த நிலையில் இதை கேள்விப்பட்டு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் செந்தில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் உதயகுமார், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணை தலைவர் தோழர் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்  தில்லை முரசு ஆகியோர் இன்று (28.10.2025) காலை  திருச்சி கோட்டை காவல் நிலையம் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பேசியும் காவல் ஆய்வாளரிடம் உடனடியாக இப்படிப்பட்ட அயோக்கியர்களை சமுதாயத்தில் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது, அக்கடையில் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உடனடியாக தவறிலைத்த அக்கடை முதலாளியை போக்சோ வழக்கில் கைது செய்ய வேண்டும் என கூறிவந்தனர்.

உடனடியாக ஆய்வாளர் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரித்தார். அக்கடை முதலாளி அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசி இருந்த ஆடியோ மற்றும் பாலியல் சீண்டல் செய்த வீடியோ அனைத்தையும் பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆய்வாளிடம் ஒப்படைத்தார். இதை ஆய்வு செய்த ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நபர் மீது கட்டாயம் வழக்கு செய்கின்றேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். அப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து பொதுநல அமைப்புகள் மற்றும் தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவல் துறையிடம் எச்சரித்து வந்தனர்.

 

மக்கள் கலை இலக்கியக் கழகம்

திருச்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.