அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி உறையூர் சோகம்! அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதிகளில் மாநகராட்சி வார்டு 08, 09, 10 ஆகிய தெருக்களில் வாழும் பொது மக்களில் நானும் ஒருவன்,

மாநகராட்சி குடிநீர் மூலம் வைரஸ் நோய் பரவி  “4 பேர் ” உயிரிழப்பு, 100 க்கும் மேற்பட் டோர் இன்று வரை தினமும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்,  என்னுடைய மனைவியும் வயிற்றுபோக்கு, வாந்தியால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

திருச்சி உறையூர் சோகம்மேலும் இது சம்மந்தமாக “தேசிய மனித உரிமைகள் ஆணையம்”, மற்றும் “தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கும்” நான் பொது மக்களில் ஒருவனாக “வாழ்வுரிமை” நீதி  கேட்டு, எனது பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் “கையெழுத்து ” வாங்கி பொது நல கோரிக்கை மனு அனுப்பபடும். அரசு துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ” லோக்பால்”  மற்றும் ” லோக் ஆயுக்தா ” ஆகிய மத்திய விசாரணை கமிஷனிலும் புகார் செய்யப்படும். பொதுமக்கள் வாழ்வாதாரத்தை காக்க தவறிய மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களை ஜனநாயக “படுகொலை” செய்த ஆளும் கட்சியையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார் அப்பகுதி செல்லாயி அம்மன் கோவில் பகுதியைச்சேர்ந்த சாமி .

இச்சம்பவம் குறித்து மற்றொருவர் கூறுகையில், அரசு அதிகாரிகளிடமும், கவுன்சிலரிடமும் புகார் சொல்லி நிலமை விபரீதம் ஆகி 4 பேர் இறந்தபிறகே  இப்பொழுது தான் அரசு அதிகாரிகள் இதுகுறித்து விசாரிக்கின்றனர். எந்த பிரச்னையும் நிலமை விபரீதம் ஆன பிறகே கவனிக்கின்றனர் அதிகாரிகள்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

திருச்சி உறையூர் சோகம்மேலும் இப்பகுதி மக்கள், திருவிழாவின்போது குளிர்பானம் அருந்தியதாலே பாதிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் சொல்கின்றனர். அதன்படி உண்மையென்றால், பொதுமக்கள் எல்லோரும், ஒரே இடத்தில் குளிர்பானதை அருந்துவதில்லை. குடிநீரை மட்டும்தான் எல்லா மக்களும் அருந்துவர். அந்த சாக்கடை கலந்த குடிநீரை அருந்தியதால் மட்டுமே பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். அரசு அதிகாரிகள் இந்த உண்மையை மறைக்கவே குளிர்பானம் சாப்பிட்டு உடல்நிலை கெட்டதாக பொய் சொல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியது…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இப்பகுதியில் கடந்த 10 தினங்களாக கழிவுநீர் குடிநீரோடு கலந்து வருவது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் சொல்லியும் கண்டுகொள்ளவில்லை. மாறாக குடிநீரை சூடுபடுத்தி சாப்பிடுங்கள் என்றனர்.  இதுகுறித்து கவுன்சிலரிடம் புகார் சொல்லியும் கண்டுகொள்ளவில்லை.

வார்டு கவுன்சிலா்

வார்டு கவுன்சிலா்

இந்த பகுதியில் சாக்கடைகளை நகராட்சி ஊழியர்கள் சரியாக சுத்தம் செய்வதில்லை. சாக்கடை அருகி லேயே குடிநீர்குழாய் இருப்பதால்  சாக்கடை நீர் குடிநீரோடு கலக்க வாய்ப்புள்ளது.  கவுன்சிலர் முத்துக்குமார் இந்த பகுதி முழுவதும் அடிக்கடி பள்ளம் தோண்டி அருகிலுள்ள வீடுகளின் பாதாளசாக்கடை இணைப்பை துண்டிப்பதாகவும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் வார்டு கவுன்சிலரை பார்க்க சொல்வதாக  சொல்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அவர்களும் சட்டசபையில் பேசியபோது, குளிர்பானம் சாப்பிடதாலேயே பொதுமக்களின் உடல்நலம் கெட்டது என்றார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதற்கு அடுத்த நாளே திருச்சி உறையூர் போலீஸ் ஸ்டேசன் அருகேயுள்ள வார்டுகளுக்கு சப்ளை செய்யும் தண்ணீர் தொட்டியை கழுவியபோது சாக்கடைபோன்ற நீர் வெளியேறியது.  இதுகுறித்தான வீடியோ வைரலாகி உறையூரை மக்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.