பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல விற்பனை அறிவிப்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறையினரால் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இரண்டு சக்கர வாகனங்கள் -10. நான்கு சக்கர வாகனங்கள் – 2 (Car-2). மூன்று சக்கர வாகனங்கள் (Auto-1). ஆக மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
வாகனங்களின் ஏலம் வரும் 10.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 10.12.2025 அன்று காலை 8.00 மணிக்கு தங்கள் ஆதார் அட்டையுடன் இரு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 2000/- முன்பணமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 5000/-முன்பணமும் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சேர்த்து சரக்கு மற்றும் சேவை வரியாக (GST) இருசக்கர வாகனத்திற்கு 12% GST மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% GST தொகையையும் செலுத்தி ஏலம் எடுத்த வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல் பெற மாவட்ட காவல் அலுவலக உதவி உதவி 8939146100 | அவசர உதவி எண் 100 பயன்படுத்திக் கொள்ளவும்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.