திருச்சியில் 70க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஒரே இடத்தில் – மலைக்கோட்டை எழுத்தாளர்கள் 100 புத்தக வெளியீட்டு விழா
‘சிரா இலக்கியக் கழகமும்’, ‘சிரா பதிப்பக’மும் இணைந்து, கவிஞர் பாட்டாளி அவர்கள் தொகுத்த ‘மலைக்கோட்டை எழுத்தாளர்கள்’ தொகுதி – ஒன்று நூல் வெளியீட்டு விழா, 23.06.2024 இன்று ஹோட்டல் ப்ரீஸ் ரெசிடென்சியில் இனிதே நடைபெற்றது.
முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழா, கவிஞர் ம. அருள்மொழிவர்மன் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்னர், சிரா இலக்கியக் கழகத்தின் தலைவரும், கவிஞருமான முனைவர் பா. ஸ்ரீராம் அவர்கள் தலைமையேற்றுத் தலைமையுரையாற்ற, மேஜர் டோனர் சீனிவாசன் அவர்கள், திருக்குறள் சு. முருகானந்தம் அவர்களின் முன்னிலையில், மூத்த எழுத்தாளர் மழபாடி ராஜாராம் அவர்கள் நூலினை வெளியிட, எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அம்மா அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்.
தமிழ்ச் செம்மல் கவிஞர் வீ. கோவிந்தசாமி அவர்கள், கவிஞர் சுமித்ராதேவி மாதவன் அவர்களும் நூலினைப் பெற்றுக்கொள்ள, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர், ‘சொல்வல்லார்’ கவிஞர் . நந்தலாலா அவர்கள் வாழ்த்துரை வழங்க, முனைவர் . சு. செயலாபதி அவர்கள், தனலட்சுமி பாஸ்கரன் அவர்கள், இளம் பேச்சாளர் . பிரபு அவர்கள் வாழ்த்து வழங்கினார்.
சிரா இலக்கியக் கழகம் நூலாசிரியர் கவிஞர் பாட்டாளி அவர்களுக்கு ‘படைப்பரசன்’ விருதினை வழங்கி பெருமைப்படுத்த, நூலாசிரியர் கவிஞர் பாட்டாளி அவர்கள் ஏற்புரை வழங்கிட, கவிஞர் பா. சுகுமாரி அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே சிறப்புற நடந்தேறியது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ 70க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஒரே இடத்தில் குழுமி வெளியிட்டு விழாவினைச் சிறப்பித்ததும், விழாதனில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் சிரா பதிப்பகம் விலையில்லா அன்புப்பிரதியினை அனைவருக்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.