ஜாதிக் கூட்டம் – விஜய் கூட்டம் – சொல்வது என்ன?
ஒரு காலத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை ஜாதி சங்கங்கள் முதல்வர் கலைஞரை நாடி தங்கள் சமூகம் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கல்வியறிவில் பின் தங்கி உள்ளது. எனவே சிறப்புச் சலுகை அறிவிக்க வேண்டும் எனக் கோரினால் அச்சமூக மக்கள் தொகை, வாக்காளர் பற்றிய புள்ளி விவரம் எல்லாம் கேட்டு விட்டு, உங்கள் சமூகத்தின் மாநாடு ஒன்றைக் கூட்டிக் காட்டுங்கள் என்பாராம். அதற்குக் கூடும் கூட்டம் கணித்தே சலுகைகள் அறிவிப்பாராம்.

அப்படித்தான் அண்ணா காலத்திலேயே மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, 1972 கலைஞர் ஆட்சியில் நிலவுடமையாளர்களான கவுண்டர்கள் FC பட்டியலிலிருந்து BC பட்டியலில் இடம் பெற்று, வளர்ச்சியைப் பெற்றார்கள். பின்னாளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களும் இதையே பின்பற்றியதாக சொல்வதுண்டு.
வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர், நாடார், அருந்ததியர், தேவேந்திரர், ஆதித்திராவிடர் என தமிழகத்தில் ஜாதியும், ஜாதிக்கட்சிகளும் வலிமை பெற இதுவும் ஒரு காரணம் என்பார்கள். இப்போது நடிகர் விஜய்க்கு புழு பூச்சிகளைப் போல் திரளும் மானுடர் கூட்டத்தைப் பார்த்ததும் ஏனோ எனக்கு மேற்படி விஷயம் நியாபகம.
Comments are closed, but trackbacks and pingbacks are open.