அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எடப்பாடி பழனிசாமி குறித்து Tweet ! அமைச்சர் T.R.B.ராஜா மீது சட்ட நடவடிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நான் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னற்றக் கழகத்தின் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வருகிறேன்.

இந்நிலையில் 17.06.2025 அன்று மாலை 5.57 மணியளவில் X சமூக வலைதளத்தில் தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B.ராஜா நிர்வகித்துவரும் தி.மு.க வின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்பப் பிரிவின் (DMK IT Wing) என்ற பக்கத்தில் எங்கள் கட்சியின் பொது செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி  மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு அவரின் கண்ணியத்தையும் மற்றும் அவரின் மாண்பையும் பதவியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் அருவருக்கத்தக்க மற்றும் ஆபாசமான அரைநிர்வாண கோலத்தில் இருக்கக்கூடிய ஒரு கேலிசித்திரத்தை பொய்யான செய்தியுடன் இணைத்து பதிவிட்டுள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B.ராஜா
தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B.ராஜா

இந்த பொய் செய்தி மற்றும் ஆயாச கேலி சித்திரம் எங்கள் கழக பொது செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி  அவமதிக்கும் வகையிலும் அவரை பின்பற்றும் கழக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் மற்றும் அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி செயலாக உள்ளது. மேலும் எங்கள் கழகத்தின் அடையாளமான பொன்மன செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் போற்றப்பட்டு எங்களது கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் மதிக்கக்கூடிய அ.தி.மு.க-வின் கழக கொடியினை அவமதிக்கும் வகையில் X வலைதளத்தில் தவறாக பயன்படுத்தி கேலி சித்திரம் வெளியிட்டுள்ளனர்.

Admission Enquiry Form

T.R.B.ராஜா மீது சட்ட நடவடிக்கைஇத்தகைய செயல்கள் இரு அரசியல் கட்சி தொண்டர்களிடையே வெறுப்பு மற்றும் மோதல் போக்கை தூண்டும் வகையிலும் அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் வகையிலும் உள்ளது. இந்த செயலானது கீழ்க்கண்ட சட்டங்களின் படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2000ன் கீழ்

f 66 (cyber defamation)

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

67 (publishing or transmitting obscene material)

69A (blocking offensive content)

மற்றும் BNS Act 2023ன் கீழ்

124 (public mischief & incitement)

356 (defamation using electronic means)

354E (offensive portrayal of individuals via digital media)

எனவே மேற்கண்ட அவதூறு பதிவினை x- சமூக வலைதளத்தில் வெளியிட்ட தி.மு.க IT Wing மாநில செயலாளர் T.R.B.ராஜா  மீதும் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து மேற்கூறிய அவதூறு செய்தி மற்றும் ஆபாச கேலி சித்திரத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் A.K.SM. பாலு Ex.MC மற்றும் அதிமுக தொண்டர்கள் தொிவித்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.