ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரண்டு இரட்டை ஜோடி மாணவிகள்!
வாணியம்பாடி மற்றும் , கிணத்துக்கடவு, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் ஓரே மதிப்பெண் பெற்ற இரண்டு பெண் இரட்டையர் ஜோடிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
பணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8 ந்ததேதி அன்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில், திருப்பத்தூர் மாவட்டம் 94.31 சதவீதமும் . கோவை மாவட்டம் 97.48% பெற்றுள்ளது.
இதனிடையே, வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் ஓரே மதிப்பெண் பெற்ற “ஹரிதா, ஹரிணி” மற்றும் கிணத்துக்கடவு அடுத்த முத்துகவுண்டனூர் அகல்யா மற்றும் அக்ஷயா. ஆகிய பெண் இரட்டையர் ஜோடிகள் ஒரே மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இரட்டையர்கள் என்றால், உருவ ஒற்றுமை இருக்கும் என்பார்கள். ஆனால் இந்தச் சகோதரிகள், 12 வகுப்பு தேர்வில் இந்த இரண்டு இரட்டையர்களின் விநோத ஒற்றுமையைக் கண்டு சக மாணவர்கள் வியந்து பார்கின்றனர்.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கே.கோவிந்தராஜ், இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு ஹரிதா, ஹரிணி ஆகிய இரட்டையர் பெண் குழந்தைகள் ஆவர். இவர்கள் இருவரும் வாணியம்பாடி தனியார் பள்ளியான “வாணி மெட்ரிக்” மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்து தேர்வு எழுதி இருந்தனர் இரட்டையர்களான ஹரிதா, ஹரிணி ஆகிய இருவரும் “தலா 573 மதிப்பெண் பெற்றனர்.
அதேபோல் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு , வழுக்குப்பாறையை சேர்ந்தவர்கள் குழந்தைவேலு ஸ்ரீதேவி தம்பதியர்களின் இரட்டை மகள்களான அகல்யா மற்றும் அக்ஷயா. இவர்கள் இருவரும் முத்துக்கவுண்டனூர் “அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளனர்”

இந்த இரட்டையர்களும் பிளஸ்-2 பொதுத்தேர்வில், ஒரே மதிப்பெண், 555 பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த இரண்டு இரட்டை. பெண் ஜோடிகள் இருவரும் பாட அளவில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றாலும், இரட்டையர்கள் போலவே ஒரே மாதிரி இரட்டை மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த நூதன அதிசயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
— மணிகண்டன்.