மதுரையில் அதிவேகமாகச் சென்ற  இரு சக்கர வாகனம் சாலையோர கடைக்குள் புகுந்ததில் இரண்டு பேர் படுகாயம்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

மதுரையில் அதிவேகமாகச் சென்ற  இரு சக்கர வாகனம் சாலையோர கடைக்குள் புகுந்ததில் இரண்டு பேர் படுகாயம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில்
அழகப்பன் நகர் அருகே சரவணா ஸ்டோர் என்னும் மிகப்பெரிய அங்காடி செயல்பட்டு வருகிறது இந்த பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் என்பது இருந்து வருகிறது இதனால் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கிறது இருப்பினும் கூட பைக்கின் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்கள் அதிவேகமாக மதுரை மாநகரை சுற்றி வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணமாக வாகனத்தை இயக்குகிறார்கள் இந்த நிலையில் இன்று இரவு மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து அழகப்பன் நோக்கி வந்த விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி சாலை ஓரமாக நடைபெற்று வரும் வடை கடைக்குள் புகுந்து விட்டது வடை கடையில் எண்ணெய் சூடாக இருந்ததால் எண்ணெய் தெரித்ததில் வடைகடையின் உரிமையாளர் மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டியும் படுகாயம் அடைந்துள்ளார் இருவரும் தற்சமயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
பழங்காநத்தம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்மதுரை சாலைகளில் இரண்டு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது இவர்களால் பல பொது மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது போலீசார் இரும்பு கரம் கொண்டு
இவர்களை தடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

-ஷாகுல், படங்கள்: ஆனந்த்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.