சாத்தூரில் ஒரே நாளில் மூன்று இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது !
சாத்தூரில் ஒரே நாளில் மூன்று இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்கு உட்பட்ட பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு
சாத்தூர் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், என்பவர் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி பார்க்கும் பொழுது தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதேபோல் நடுசூரங்குடி பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை வழக்கம்போல், சாத்தூர் நான்கு வழி சாலை பகுதியில், நிறுத்திவிட்டு மதுரைக்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்க்கும் பொழுது தனது இரு சக்கர வாகனம் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் படந்தால் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் இவர் சாத்தூர் TVS ஷோரூம் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பணிகளை முடித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும்பொழுது இவருடைய இரு சக்கர வாகனமும் காணாமல் போய் உள்ளது,
இந்த நிலையில் இந்த மூன்று பேர் அளித்த புகாரின் அடிப்படையில் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தூங்காவனம் பகுதியைச் சேர்ந்த
தாளமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சாத்தூர் பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இவரிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல்செய்தனர். இவர் மேல் எட்டு வாகன திருட்டு வழக்கு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அடுத்தடுத்து காணாமல் போன இருசக்கர வாகனத்தை 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சாத்தூர் காவல்துறையினர் மீட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.