மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய இரு இளைஞர்கள் கைது

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய இரு இளைஞர்கள் கைது:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 5 மாத கர்ப்பமாக்கிய இரு இளைஞர்களை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Srirangam MLA palaniyandi birthday

கைது செய்யப்பட்டவர்கள்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

லால்குடி அருகே முள்ளால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ மனைவி வசந்தா (63). இவர்களுக்கு 5 பெண், 1 ஆண் என 6 குழந்தைகள் உள்ளனர். 4 பெண்களுக்கு திருமணம் ஆன நிலையில் இளைய மகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் வசந்தா கணவர் ராஜீ கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கடந்த சில தினங்களாக வயிறு வலியால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அவரது தாய் வசந்தா லால்குடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த பெண் மருத்துவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதனை கூறியுள்ளார். இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார் என மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெண்ணின் தாய் கேட்ட போது, தனது வீட்டிற்கு அருகேயுள்ள ராஜேந்திரன் மகன் ராஜபிரபு (24), சன்னாசி மகன் பிரகாஷ் (32). ஆகிய இருவரும் தன்னிடம் பாலியல் வன்மம் செய்தனர் என கூறியுள்ளனர்.

இது குறித்து பெண்ணின் தாய் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் விசாரணை செய்து கைது செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.