நெருக்கடியில் திருச்சி மாநகர நுண்ணறிவு போலிசார்.. !

0

நெருக்கடியில் திருச்சி மாநகர நுண்ணறிவு போலிசார்.. !

 

திருச்சி மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் 18 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.  அதில் 4 மகளிர் காவல்  நிலையங்களும் உண்டு. மாநகரில் உள்ள ஒவ்வொரு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களிலும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் கட்டாயமாக ஒருவர் இருப்பார்கள்.

 

2 dhanalakshmi joseph

இக்காவலர்கள் மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவார்கள்.. இவர்களின் பணி   முழுவதும் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை   கண்காணித்து காவல் ஆணையரின் பார்வைக்கு நேரடி ரிப்போர்ட் தெரிவிப்பது..போன்ற பணிகளை உள்ளடக்கி பணியாற்றி வருவார்கள்..

 

தற்போது திருச்சியில் முக்கிய காவல்நிலையங்களான ஸ்ரீரங்கம், கன்டோன்மென்ட், கே.கே.நகர், உறையூர்  போன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பது மற்ற காவல் நிலையங்களை பார்க்கிலும் மக்கள் தொகை அதிகமான பகுதிகள். மாநகருக்குள் முக்கிய பல வழக்குகள் இக் காவல் நிலையங்களுக்கு அதிகம் வருவதுண்டு…

 

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கேகே நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் இருதரப்பினர் மோதிக்கொண்டு அடிதடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மூலம் அப்போது திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த வரதராஜுலு ஐபிஎஸ் பார்வைக்கு செல்ல.. இதுதொடர்பாக கே.கே நகர் காவல் நிலையம் மூலம் எந்த ஒரு தகவலும் மாநகரக் காவல் ஆணையரின் பார்வைக்கு கொண்டு வராத காரணம் என்ன என்று கேட்டதுடன்.. அது குறித்த தகவல் காவல்நிலையத்திற்கு தெரியவில்லை என்பதும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கும் தெரியவில்லை. காவல் நிலைய எல்லைக்கு கடைசி பகுதியில்  இந்த பிரச்சனை நடந்ததால் அப்போது பணியில் இருந்த காவலர்களுக்கு இதுகுறித்த தகவல் தெரியாமல் போனது…

 

இதன் போன்று ஸ்ரீரங்கம், கண்டோன்மண்ட், கே.கே நகர், காவல் நிலையங்களில் இரண்டு நுண்ணறிவு காவலர்கள்பணியில் அமர்த்தப்பட்டனர்..

 

இந்நிலையில் சமீபகாலமாக மாநகரின் இந்த முக்கிய 4 காவல்நிலையங்களான ஸ்ரீரங்கம், கண்டோன்மெண்ட், கே.கே நகர், உறையூர் போன்ற காவல் நிலையங்களில் ஒரே ஒரு நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் மட்டுமே  இரவு மற்றும் பகல் பணி பார்த்துக்கொள்ள வகையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மாநகரின் முக்கிய பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்காணிக்க போதிய நேரம் இல்லாமலும், தகவல்களை சேகரித்து மேலதிகாரிகளுக்கு வழங்குவதில் தாமதமும் இருந்து வருகிறது.

 

எனவே மாநகர காவல் ஆணையர் திருச்சி மாநகரில் உள்ள மேற்கண்ட நான்கு காவல் நிலையங்களிலும் ஏற்கனவே இருந்ததைப் போல 2 கூடுதல் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டாள் தற்போது கண்டறியப்பட்டு தடுக்கும் குற்ற சம்பவங்களை பார்க்கிலும் பல மடங்கு மாநகருக்குள் குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்பது தான் உண்மை…

 

– ஜித்தன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.