முறைகேடுகளில் மூழ்கி திளைக்கும் உளவுத்துறை மூத்த அதிகாரி…!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முறைகேடுகளில் மூழ்கி திளைக்கும் உளவுத்துறை மூத்த அதிகாரி…

 

சென்னை தலைமையகத்தில் கூடுதல் பொறுப்புடன் பணியாற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செல்வ வளம் கொண்ட செம்மொழி உளவுத்துறை அதிகாரி ஒருவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். கோவையில் பணியாற்றிய போது கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இருசக்கர வாகனத்தை சென்னைக்கு மாற்றலாகி வந்த பின்பும் ஒப்படைக்காமல் தனது மகனுக்கு பயன்படுத்த கொடுத்துள்ளார்.  5 ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் தான் கோவையில் உள்ள எஸ்பிசிஐடி அலுவலகத்தில் வாகனத்தை  ஒப்படைத்துள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்தை ஏமாற்றி டபுள் டி.ஏ. மூலம் 10 லட்சத்து 80 ஆயிரம் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளார்.

 

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

உளவுத்துறை உயர் அதிகாரி தனது உறவினர் என கூறிக்கொண்டு பல்வேறு முறைகேடுகளை செய்து வரும் இவர் பணி  நீட்டிப்பு காலத்தின் போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 

Apply for Admission

சென்னையில் இருந்து கடந்த மார்ச் 3ஆம் தேதி மருத்துவ விடுப்பில் சென்றவர் விடுப்பு முடிந்து சென்னைக்கு  தகவல் கொடுக்காமல் கோவையில் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி அன்று தகவல் கொடுத்துள்ளார். இந்த விடுமுறை காலத்தை கொரோனா விடுப்பில் கழித்துக் கொள்ளவும் எழுதி கொடுத்துள்ளார். மெடிக்கல் லீவில் சென்றதற்கான பதிவுகள் ஏதும் சர்வீஸ் புக்கில் பதியவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்து கோவையில் ரிப்போர்ட் செய்துவிட்டு சென்னை செல்லும் போது தனது சர்வீஸ் புக்கை விதிமுறைகளை மீறி தானே பெற்றுச் சென்றுள்ளார்.

 

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இவர் சென்னையில் இருந்து வாரம் தோறும் தவறாமல் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை புறப்பட்டு சனி, ஞாயிறு நாட்களில் கோவையில் கழித்துவிட்டு காலை 11 மணிக்குத் தான் மீண்டும் விமானம் மூலம் சென்னை செல்கிறார். விடுப்பில் செல்லும் இந்த இரண்டு நாட்களுக்கும் டபுள் வாங்கிவிடுகிறார். அத்துடன் மாதா மாதம் இவரது வாகனத்தை ஆய்வு செய்ததாக பதிவேடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் செய்யும் முறைகேடுகளுக்கு உளவுத்துறை ஏடிஎஸ்பி ஒருவரும் ஒத்துழைத்து வருகிறார்.

துறை ரீதியான ஊழல் புகார் ஏதும் தன் மீது சுமத்தப்பட்டால் உளவுத்துறை உச்சகட்ட அதிகாரியின் உறவுக்காரர் என்று சொல்லி தப்பித்து விடுகிறார்.

 

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.