அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நம் மாநில பறவை பாலூட்டும் மரகதப் புறா! பறவைகள் பலவிதம்… தொடர் 12

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ஆண் பெண் இரண்டு புறாக்களுக்கும் இந்த புறாப்பாலானது சுரக்கும். பறவைகளில் பூநாரைகளுக்கும், பென்குவின்களுக்கும் இந்தப் பால் சுரப்பி உண்டென்றாலும் பென்குவினை பொறுத்தவரை ஆணிற்கு மட்டுமே இந்தப் பால்சுரப்பிப் பையானது உண்டு.

ஆனால், நம்ம ஊருப் பறவைகளில் இந்தச் சிறப்புடையவை புறாக்கள் மட்டுமே. ஆண் பறவையின் தோள் பட்டை விளிம்புகளில் வெள்ளை நிற பட்டைகளை காணலாம். இதனை வைத்து ஆண் பெண் புறாக்களை நாம் எளிதில் பிரித்து அறிய முடியும். இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட பறவை இனம் இது. பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான இடத்தில் இப்புறாக்கள் உள்ளன. அதன் பரவலில் ஆறு துணை சிற்றினங்களாக வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் பார்க்கும் மரகத புறா, பசுபிக் மரகத புறா( இந்தோனேசியா & ஆஸ்திரேலியா) மற்றும் ஸ்டெ ஃபேன்ஸ் மரகத புறா(நியூ கினியா, சாலமோன் & இந்தோனேசியா தீவுகள்) மூன்றும் ஒரே இனத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பறவைகள் பலவிதம்... தொடர் 12
பறவைகள் பலவிதம்… தொடர் 12

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனை நாம் சாதாரணமாக காடுகள், மரங்கள் சூழ்ந்த இடங்கள் மற்றும் சதுப்புநில பகுதிகளில் காணலாம். பறப்பதை விட தரையில் இரை தேடுவதையே அதிகம் விரும்பும் இப்புறாக்களை நாம் அடர்ந்த காடுகளின் தரைப்பகுதியில் பார்க்க முடியும். தரையில் விழுந்த பழங்கள், விதைகள் மற்றும் பூச்சிகளை உட்கொள்ளும். இதன் சரியான எண்ணிக்கை பற்றிய குறிப்புகள் இல்லை. அருகி வரும் இனப் பட்டியலில் சேர்க்கப்படாத பறவை இது. எனினும் காடுகளில் இதன் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகின்றது.

https://www.livyashree.com/

வாத நோய்க்கான நாட்டுப்புற மருந்தாக கருதப்படுவது இப்புறாக்களின் எண்ணிக்கை குறைவதற்கான ஒரு காரணம். மேலும், சட்ட விரோதமான செல்லப்பிராணி வர்த்தகம் இப்புறாக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கண்ணைக் கவரும் அழகிய நிறமே இதற்கு பெரிய எதிரியாக உள்ளது. சட்ட விரோதம் என்று தெரிந்தும் பலர் வீடுகளில் இதைப் போன்ற அரிய பறவைகள், மைனா மற்றும் பச்சைக் கிளிகள் வளர்ப்பதை பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்ட விசித்திர பறவை ஆர்வலர்களிடம் இது தவறு என்று கூறினால், நாங்கள் மிகச் சிறப்பாக செல்லமாக வளர்க்கிறோம். எங்களாலேயே அதனை சிறப்பாக கவனிக்க முடியும் என்ற பதிலையே கேட்கமுடிகிறது. ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் மனிதர்களின் பறவை காதலை விட இயற்கை அன்னையின் பறவை காதல் மிகப் பெரியது.

 

—    ஆற்றல் பிரவீன்குமார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.