அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Hotel Training Department பயிற்சி என்பது குழந்தை வளர்ப்பது போல… ஹோட்டல் துறை என்றொரு உலகம்!  தொடர் 17

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஹோட்டல் தொழிலில் பல்வேறு துறைகளைப் பற்றி நாம் பார்த்து வருகிறோம், ஹோட்டல் தொழிலுக்கு என்னவெல்லாம் தேவை எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களிடம் நமது சேவையை கொண்டு செல்வது என்று மற்ற அனைத்து துறைகளையும் வழிநடத்தும் துறையாக ட்ரைனிங் டிபார்ட்மென்ட் (Training Department) இருக்கிறது.

ஒரு தொழிலில் புதியவர்கள் முதல், ஆகப் பெரிய பதவி வகிக்கும் பொறுப்பாளர்கள் வரை, அனைவரையும் அந்தந்த பதவிக்கு ஏற்ப, பணிக்கேற்ப பயிற்சி கொடுப்பது இந்த ட்ரைனிங் டிபார்ட்மென்ட் (Training Department) ஆகும். இந்த துறையில் பணி புரிவதற்கு சில அடிப்படை தகுதிகள் தேவைப்படுகின்றன.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

எந்த ஒரு பயிற்சியாளரும் தான் பயிற்சி கொடுக்கும் தொழிலைப்பற்றியும் துறையை பற்றியும் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆகையால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ட்ரைனிங் டிபார்ட்மென்டில் பணி புரிவதற்கு நிச்சயம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் ஒரு ட்ரைனிங் எக்ஸிக்யூட்டிவ் அல்லது அசிஸ்டன்ட் மேனேஜர் அல்லது மேனேஜர் என்ற பதவிகளில் பணிபுரிவதற்கு, அந்தந்த பதவிக்கு தகுந்தாற் போல் முன்னனுபவம் நிச்சயம் தேவை. அதாவது, ஒரு ஹோட்டலில் குறைந்த பட்சம் நான்கைந்து ஆண்டுகள் பணிபுரிந்தவராகவோ அல்லது ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தவராகவோ இருந்தால் இந்த ட்ரைனிங் டிபார்ட்மென்ட்ல் வேலைசெய்வது எளிமையாக இருக்கும்.அனுபவம் குறைவாக இருந்தால் ட்ரைனிங்டிபார்ட்மென்ட்டில் துவக்க பதவிகளில் கவனம் செலுத்தலாம். மேலும், அனுபவம் அதிகமாக இருந்தால் உயர் பதவிக்கு விண்ணப்பிப்பது எளிமையாக இருக்கும்.

Executive Leadership Training: An Imperative for Executivesஇங்கே, பயிற்சி என்றால் என்ன? என்னவெல்லாம் பயிற்சி கொடுப்பீர்கள்? அதன் முக்கியதுவம் என்ன? அது என்ன ட்ரைனிங்? படிச்சுமுடிச்சு வந்துட்டாங்க, தானாவேலை பார்க்க மாட்டங்களா? அவங்களுக்கு எப்படி வேலை பாக்கணும்னு சொல்லிவேற குடுக்கனுமா? என்றெல்லாம் கேள்விகள் எழும். நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது? வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க் கிறார்கள்? அவ்வபோது என்ன மாற்றங்கள் நிகழ்கிறது? எப்படி நாம் நமது தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்? மேலும், மேற்கொண்டு வளர என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? எவ்வாறு செயல் பட வேண்டும்? என்று தொடர்ந்து பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியமாகும். பயிற்சி என்பது குழந்தை வளர்ப்பது போல் ஆகும். தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் தான் சரியாக வேலை நடக்கும்.

யாவரும் கேளீர்

அப்ப, ஒருமுறை கூறினால் சொன்ன புரியாதா? என்று கேட்பவர்களும் உண்டு. போதாது என்பதே பதில். மனிதனுக்கு மறதி உண்டு. நினைவூட்டுபவர் ஒருவர் தொடர்ந்து தேவை. அல்லதுபோக்குவரத்து காவல் துறையினர் போல் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். சாலையில் நாம் சரியாக சென்றாலும், போக்குவரத்து காவலரைக் கண்டவுடன் நம்மை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வோம். மேலும் அடுத்த சில கிலோமீட்டர்களுக்கு சரியாக பயணிப்போம். மீண்டும் கொஞ்ச தூரத்தில் மறந்து விடுவோம். மீண்டும் ஒரு போக்குவரத்து விதிமுறை அறிவிப்பு அல்லது காவலர் தேவைப்படுகிறார். அது போலத்தான் ஒரு வேலையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தால்தான், அந்த வேலையை சரியாக செய்வார்கள். பலநாட்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக ஒருவர் மற்றும் அனைவரும் நற்பணிகளைச் செய்யும் பொழுது அதுவே ஒரு நிறுவனத்தின் கலாச்சாரமாக மாறி விடுகிறது.

ஹோட்டல் துறை என்றொரு உலகம்
ஹோட்டல் துறை என்றொரு உலகம்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

பல பெரிய நிறுவனங்களில் Training Department என்ற ஒரு துறை தனியாக இருக்கிறது. மிக முக்கியமாக அதிக பணியாளர்களை கொண்ட நிறுவனங்கள் இவ்வாறு ஒரு துறையை தனியாக உருவாக்கி, தொடர்ந்து தங்களது அனைத்து பணியாளர்களுக்கும், ஏன் முதலாளிகளுக்குமே பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பணிக்கு தகுந்தாற்போல் தேவைக்கேற்றபயிற்சிவகுப்பு களையும் பாடங்களையும் சேவைகளையும் வடிவமைத்து சொல்லிக் கொடுப்பது இந்த துறையாகும். நிறுவனத்தில் கட்டிடத் திற்கும், சாஃப்ட்வேர், மற்றும் பல பொருட்களுக்கும் நாம் முதலீடு செய்கிறோம்.

அதேபோல்தான் நமது பணியாளர் பயிற்சிக்கும் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.அப்போதுதான் நிறுவனம் நல்லதொரு கலாச்சாரத்தை உருவாக்கவும், தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்தவும் முடியும். இப்படி Culture எனும் கட்டமைப்பை உருவாக்கும் ட்ரையினிங் டிபார்ட் மெண்டில்தான் நான் அதிக ஆண்டுகள் பணிபுரிந்தேன். முதலில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஹோட்டல் பணி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லுரிகளில் ஆசிரியப்பணி என பணிபுரிந்து, அதன் பின்னர் நட்சத்திர ஹோட்டல்களில் ட்ரையினிங் மேனேஜராக 11 ஆண்டுகளாக பணிபுரிந்து பல்வேறு நிலையில் இருந்த பணியாளர்கள், சில முதலாளி கள், அடுத்த தலைமுறை முதலாளிகள் போன்றோருக்கு பயிற்சி அளித்து, பின்னர் 2019ஆம் ஆண்டு முதல், நான்; ஹோட்டல் ஆலோசக ராகவும் பயிற்சியாளரகவும் செயல்படும் எனது சொந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

ஹோட்டல் துறை என்றொரு உலகம்ஹோட்டல் நிறுவனங்கள், பல வணிக நிறுவனங்கள், மருத்துவமனை பணியாளர்கள், உற்பத்தி தொழில் நிறுவனங்கள் என கிட்டத் தட்ட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கும், 25க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி கொடுப்பது, வியாபார லாபநட்ட ஆலோச னைகள் தருவது போன்ற சேவைகள் செய்து நான் முதலாளியாக இருக்கிறேன்.

ட்ரையினிங் துறையின் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன் என்று பெருமைக்காக அல்லாமல், உதாரணமாக கூறுவதில் மகிழ்வடைகிறேன். மேலும், இந்ததகவல் பலருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். இப்படி எனது தொழிலில், நான் இன்று சிறந்துவிளங்க, எனக்கு தேவையான அனுபவத்தையும் பாடத்தையும் கொடுத்தது ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பும் ஹோட்டல் அனுபவமும் ஆகும். எனது நிறுவனத்திற்கும் அவ்வப்போது பயிற்சியாளர்களும், குவாலிட்டி ஆடிட்டர்களும் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கும் நான் மேலே குறிப்பிட்ட தகுதிகள்தான் தேவை. ஹோட்டல்தொழிலில் பலதுறைகளில் வேலை வாய்ப்பு பற்றியும் முதலாளி ஆகும் வாய்ப்பு பற்றியும் இதுவரை பார்த்தோம். இனி ஹோட்டல் தொழிலின் பல்வேறு வடிவங்களையும் தொழில் சார்ந்த துணைத்தொழில்கள் பற்றியும், ஹோட்டல் பணியின் வேலை, கலாச்சாரம் பற்றியும், பணிபுரிபவர் வாழ்க்கைத்தரம் குறித்தும் இனிவரும் தொடர்களில் பார்ப்போம் .

 

தொடரும்

கபிலன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.