மகிழினியும் எறும்பும்

சிறார் இலக்கியம் நூல் அறிமுகம்-2

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நூல் அறிமுகம் : மகிழினியும் எறும்பும் (சிறார் நூல்)

ஆசிரியர் : இளம் எழுத்தாளர் ஹாசினி பேரலை (ஐந்தாம் வகுப்பு)

இந்த வார அங்குசம் வார இதழில்…

வெளியீடு: ஈனில் பதிப்பகம்.

செல் : 9751169516 – விலை : 75/-

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிறார் எழுத்துகளில் இரண்டு வகை உண்டு. பெரியவர்கள் சிறுவர்களுக்காக எழுதுவது ஒன்று. சிறுவர்களே சிறுவர்களுக்காக எழுதுவது மற்றொன்று. சிறுவர்களே சிறார் எழுத்து எழுதும் பொழுது அது முழுமையான சிறார் இலக்கியமாக உள்ளது. அந்த வகையில் ஹாசினி பேரலை எனும் ஐந்தாம் வகுப்பு மாணவி எழுதிய சிறார் நூல்தான் ‘மகிழினியும் எறும்பும்’.

‘பஸ் பயணம்’ என்கிற கதையில் நீர் மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் ‘பறவைகள் ஏன் முக்கோணமாக பறக்கின்றன?’ என்பன போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார். ‘மகிழினியும் எறும்பும்’ என்னும் கதையின் மூலம் எறும்பின் மொத்த வாழ்க்கையினையும்; எறும்புகள் எப்படி வரிசையாகச் செல்கின்றன என்பதற்கு பதிலையும் கூறியுள்ளார்.

‘மீனின் கவலை’ கதையில் மீன் தன்னுடைய நண்பர்கள், பெற்றோரைப் பிரிந்து வந்த கவலையைச் சொல்கிறது. அதைக் கேட்டவுடன் மனம் நெகிழ்ந்த அறிவு நிலா தான் அடம்பிடித்து வாங்கிய தங்க நிற மீனை மீண்டும் ஆற்றில் விடுகிறாள். ‘புதையல்’ கதையின் மூலம் பசி என்று வரும் ஒவ்வொருவருக்கும் உணவு கொடுத்து உதவ வேண்டும் எனும் பண்பினை அழகாகக் கூறியுள்ளார்.

‘எண்பது பக்கங்கள்’ கதையின் மூலம் எழுத்துக்கூட்டி வாசிக்கின்ற பாலு, தாத்தா கொடுத்த எண்பது பக்கங்கள் கொண்ட புத்தகத்தை எப்படி படித்தான் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.