விளையாட்டில் பாலின சமத்துவம் !

சிறார் இலக்கியம் – 13

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் மிக இயல்பாக, அவரவர்களுக்கு வசதியான உடைகளை அணிந்திருப்பது போலவும் சிகை அலங்காரங்களை  தங்களின் பொருத்தப்பாட்டிற்கு ஏற்ப வைத்துக் கொள்வது போலவும் கதைகளில் படைக்கலாம்.

உதாரணமாக  பெண் கதாபாத்திரம், பேண்ட் சர்ட் அணிந்து, எளிதில் தலைவாரி கொள்ளும் அளவிற்கு  குறைவான முடியை வைத்திருப்பது போலவும் , விலை உயர்ந்த அணிகலனோ அல்லது தன்னுடைய திறமைக்கு சுமையாக இருக்கும் அணிகலன்களையோ அணியாமல் மிக்க இலகுவாக  தன்னை தயார்படுத்தி சாதனைப் பெண்மணியாக  வெளிவருவதை கதைகளின் வழியே சித்தரிக்கலாம். இது போன்ற கதைகள் மூலம் நார்மலைஸ்  என்று சொல்லக்கூடிய மிக இயல்பான நிலையினை பாலின சமத்துவ கூறுகளில் மாற்றத்தை உருவாக்கலாம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

பெண் பிள்ளைகளுக்கு  முடி திருத்தம் செய்யும் கடைகளில் குறைவான முடி அளவை கூட பாய் கட் என்ற பெயரடையில்தான் இன்றளவும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம். Ai- தொழில்நுட்பம் வளர்ந்து, அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதிக்கும் காலத்தில் கூட  கூந்தலில் பாய் கட்(boy cut), கேர்ள் ஹேர் (girl hair) என்று பாலின பேதங்களுடன் கூடிய  பேதமை கொண்ட சமூகமாக  நாம் நிற்கின்றோம் என்பது வருத்தத்திற்குரியதே.

பாலின சமத்துவம் சார்ந்த கதைகளில் வரையறை செய்யப்படும் விளையாட்டுகளும் விளையாட்டுப் பொருள்களும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கார்த்திகா கவின்குமார்
கார்த்திகா கவின்குமார்

பாலின சமத்துவக் கருத்துகளைச் சிறுவர்களுக்கான கதைகளில் கொண்டு வரும்போது, விளையாட்டுப் பொருட்கள் (Toys) மற்றும் விளையாட்டுகள்   என்பவை மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எளிதில் குழந்தைகளைச் சென்றடையும் ஒரு கருவியாகும்.

சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மனத்தில் ஆணாதிக்க அல்லது பாலினசம் சார்ந்த பிம்பங்களை விதைப்பதில் பொம்மைகளுக்கும், விளையாட்டிற்கும் பெரிய பங்குண்டு.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் அனைவராலும் விளையாடக் கூடிய விளையாட்டு. விளையாட்டிற்கு ஆண் பெண் போன்ற பேதங்கள் கிடையாது. ஆனால் நம்முடைய சமூக சூழலில் ஆண் பிள்ளைகள் என்றால் கிரிக்கெட் விளையாட்டு என்றும், பெண் பிள்ளைகள் என்றால்  பொம்மைகளும், சொப்பு சாமான்களும் வைத்து விளையாடும் விளையாட்டு என்றும்   மிக இயல்பாக கதைகளின் வழிகூட கடத்தி வருகின்றோம்.

—  கார்த்திகா கவின்குமார், எழுத்தாளர், கதைசொல்லி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.