குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது.
இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம்.
‘மகிழினியும் எறும்பும்’ என்னும் கதையின் மூலம் எறும்பின் மொத்த வாழ்க்கையினையும்; எறும்புகள் எப்படி வரிசையாகச் செல்கின்றன என்பதற்கு பதிலையும் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.