சீருடைப் பணியாளர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணிக்காலியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு சிறப்பு இலவச மாதிரி தேர்வுகள்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
366 பணிக்காலியிடங்களுக்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) 933 மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) எழுத்துத்தேர்வு வருகின்ற 21.12.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு இலவச மாதிரித் தேர்வுகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 28.11.2025 முதல் நடத்தப்படவுள்ளன. இதில் மொத்தம் 9 இலவச முழுமாதிரித் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இந்த இலவச மாதிரி தேர்வுகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-24135109499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.