‘அப்பல்லோ’ உபாசனாவின் புதிய சுகாதார திட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் ஆந்திர மாநிலம் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்.

இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கன்வாடி பணிகள் முக்கியமான முதல் 1000 நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

'அப்பல்லோ' உபாசனாவின் புதிய சுகாதார திட்டம்!
‘அப்பல்லோ’ உபாசனாவின் புதிய சுகாதார திட்டம்!

மேலும் ஊட்டச்சத்து குறைபாடே இல்லாமல் செய்வதும்  தாய் மற்றும் சிசு இறப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது.   ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் குழந்தைப் பருவக் கல்வி பற்றிய அறிவைக் கொண்ட குடும்பங்களை இது மேம்படுத்துமாம்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட வேலைகளை வழங்குதல் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார நிலைமைகளைக் கண்காணிக்க டிஜிட்டல் சுகாதார பதிவுகளை வரிசைப்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்குமாம்.

இதற்கு பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தும் முடிவில் உள்ளாராம் உபாசனா. ஆந்திர துணை முதல்வர் ‌பவன் கல்யாண் தொகுதியில் ஆரம்பித்துள்ள இந்த முயற்சி, வெற்றி பெற்றால்  பிரதமரின் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

பிதாபுரம் மாவட்டத்தில் உள்ள 109 அங்கன்வாடி மையங்களை அழகுபடுத்தவும், மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

 

—  மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.