பாட்டில் பன்னாட்டு கம்பெனியோடது … சரக்கு என்னோடது … சர்ச்சையில் சிக்கிய 7 குளிர்பான நிறுவனங்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாட்டில் பன்னாட்டு கம்பெனியோடது … சரக்கு என்னோடது … சர்ச்சையில் சிக்கிய லோக்கல் 7 குளிர்பான நிறுவனங்கள் !

பிரபலமான குளிர்பான கம்பெனிகளின் பாட்டிலை பயன்படுத்தி அதன்மேல் தங்களது நிறுவனத்தின் லேபிளை ஒட்டி உள்ளூர் அளவில் விநியோகம் செய்யப்பட்டு வந்த 7 குளிர்பான நிறுவனங்களில் அதிரடி ஆய்வை நடத்தி, பத்தாயிரத்துக்கும் அதிகமான பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேற்படி நிறுவனத்தின் உற்பத்தியையும் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்கள்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

திருச்சி மாவட்டத்தில் இயங்கி வந்த, சக்தி கலர் கம்பெனி – மணிகண்டம்; ஒன்லி ஒன் எக்ஸ்போர்ட் டிரேடர்ஸ் – உய்யக்கொண்டான் திருமலை; நியூ ரத்னா சோடா & கோ – கள்ளிக்குடி; வின்ஸ் பாதாம் மில்க் அன்ட் சாப்ட் டிரிங்க்ஸ் – வாழவந்தான் கோட்டை; ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் சோடா பேக்டர் – பீமநகர்; திவ்யா புட்ஸ் – வரகனேரி; நியூ சென்டா பேவரேஜஸ் – ஆவூர் ஆகிய ஏழு நிறுவனங்கள்தான் இந்த அதிரடி ஆய்வில் சிக்கியிருக்கின்றன.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று 26.11.2024, செவ்வாய்க்கிழமை அன்று காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை அவர்களிடமிருந்து வரப்பெற்ற உத்தரவினை அடுத்து அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல்துறையினரோடு இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு மற்றும் காவல் ஆய்வாளர் முனிஷ், திருச்சி மாவட்ட அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல்துறை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவும், அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க காவல் துறையின் குழுவும் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட, மாநகர ஆயுதபடை காவலர்களும் இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 7 குளிர்பான தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

7 குளிர்பான நிறுவனங்களில் அதிரடி ஆய்வு
7 குளிர்பான நிறுவனங்களில் அதிரடி ஆய்வு

இந்த ஆய்வின் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 தொழிற்சாலைகளில் பிரபலமான நிறுவனத்தின் பெயர்களை அச்சிடப்பட்ட பாட்டில்களில் இவர்கள் தங்களது நிறுவனத்தின் லேபிளை ஒட்டி பொதுமக்களுக்கு தவறுதலான வழிகாட்டுதல் மற்றும் உணவு பாதுகாப்பு (ம) தர நிர்ணய சட்டம், 2006 விதிமுறைகளை பின்பற்றாமலும் பொதுமக்களுக்கு பிரபல நிறுவனங்களின் குளிர்பானங்களை தருவது போன்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இந்த ஆய்வின் போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து மேலே கூறியபடி உள்ள குறைபாடுகள் உள்ள சுமார் 12,370 (பன்னிரெண்டாயிரத்து முந்நுாற்று எழுபது) குளிர்பானம் நிரப்பப்பட்ட பாட்டில்களும், மற்றும் 3298(மூவாயிரத்து இருநுாற்று தொண்ணூற்று எட்டு) காலி பாட்டில்களும், அதன் மொத்த பறிமுதல் அளவு 2650(இரண்டாயிரத்து அறுநுாற்று ஐம்பது) லிட்டர் ஆகும். இதன் மதிப்பு ரூ.1,11,592/-(ரூபாய் ஒரு இலட்சத்து பதினோராயிரத்து ஐநூற்று தொண்ணூற்று இரண்டு) ஆகும். இவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, 7 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

காவல்துறையை சார்ந்த காவலர்கள் மற்றும் ஆனந்தகுமார், அருண், ராஜ்குமார், குமார், பஜ்ராபேகம் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வில் ஈடுபட்டனர்.

டாக்டர்.R.ரமேஷ்பாபு ஆய்வு
டாக்டர்.R.ரமேஷ்பாபு ஆய்வு

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு  கூறுகையில் குளிர்பானங்கள் நிறுவனங்கள் பிரபல நிறுவனங்களின் பாட்டில்களை பயன்படுத்தி இனிவரும் காலங்களில் தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என்றும், பொதுமக்களும் தாங்கள் இது போன்ற குளிர்பான பாட்டில்களை பார்க்கும் போது மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95 மாநில புகார் எண் : 94 44 04 23 22 ஆகிய உணவு பாதுகாப்பு துறை புகார் எண்ணிற்கு தகவல் கொடுக்கப்பட்டால், தங்களுடைய தகவல் ரகசியம் காக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

தற்காலிகமாக நிறுத்திய நிறுவனங்கள் பட்டியல்
தற்காலிகமாக நிறுத்திய நிறுவனங்கள் பட்டியல்

ஏற்கெனவே, பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக நாடு முழுவதும் வியாபார வலைபின்னலுடன் இயங்கி வந்த சுதேசி குளிர்பான நிறுவனங்களையெல்லாம் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களே விலைக்கு வாங்கி, அதன் உற்பத்தி மற்றும் விநியோக பொறுப்பை ஏற்று சந்தையில் அதே பெயரில் விற்பணையையும் செய்து வருகின்றன.

இதன் காரணமாக, தங்களது மாவட்ட எல்லையையே தாண்ட இயலாத சிறு நிறுவனங்கள் அந்தந்த மாவட்ட அளவிலான சந்தையை நம்பியே இயங்கியும் வருகின்றன. இதுபோன்ற உள்ளூர் அளவிலான குளிர்பான நிறுவனங்கள்தான் தற்போது சிக்கியிருக்கும் இந்த ஏழு நிறுவனங்களும். அவர்களது தயாரிப்புக்கென்று சொந்த பாட்டிலை பயன்படுத்தாமல், பிரபலமான பன்னாட்டு நிறுவனங்களின் பாட்டிலில் தங்களது சொந்த தயாரிப்பை நிரப்பி அதன்மேல் தங்களது லேபிளை ஒட்டி சந்தையில் புழகத்தில் விட்டதற்காகவே, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

–  அங்குசம் செய்திப்பிரிவு.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.