அதிகாரிகளும் இல்லை … அடிப்படை வசதிகளும் இல்லை … தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அவலம் !
தேனி வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் குண்டும் குழியுமான சாலைகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை விதிகளை கற்றுக்கொள்ளும் வசதிகள், இன்றி இடைத்தரகர்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டியிருக்கின்றனர்.
தேனியில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு, தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் இரண்டு சக்கரம், மூன்று சக்கரம். நான்கு சக்கரம், உள்ளிட்ட கனரா வாகனங்களுக்கு புதிய எண் வாங்கவும், ஓட்டுனர் உரிமம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு நிரந்தர வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் இல்லாத காரணத்தால் மதுரை வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் கூடுதல் பொறுப்பு கவனித்து வருகிறார். இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், தேனி வட்டார போக்குவரத்துறை அலுவலகத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகம் வளாகம் முழுவதும் குண்டு குழியுமாக, கற்கள் பெயர்ந்து சாலைகளாக காணப்படுகிறது.
மேலும், இங்கு உள்ள பெண்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் பூட்டியே கிடக்கிறது. ஆண்கள் கழிப்பிடம் துர்நாற்றம் வீசி உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலையில் காணப்படுகிறது. இங்கே வரக்கூடிய பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதிகள் இன்றியும், காத்திருப்போர் அறை இன்றியும் காணப்படும் அவலம் நீடித்து வருகிறது.
எனவே, தேனி வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, செய்து தர வேண்டும். நிரந்தர வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் இல்லாத காரணத்தால் தினந்தோறும் பொதுமக்கள் அளக்கழிக்கப்படுவதை தவிர்க்க நிரந்தர வட்டார போக்குவரத்து துறை அலுவலர் நியமிக்க வேண்டும். இடைத்தரர்கள் இன்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல் பட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
–ஜெய்ஸ்ரீராம்.
இடைத்தரகர்கள் அதிகாரிகள் நல்லாசி களுடன் செயல்படுபவர்கள்