வணிகர்களை பாதிக்கும் வாடகை மீதான ஜி.எஸ்.டி. வரி – சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் ! – விக்கிரமராஜா போராட்ட அறிவிப்பு !
வாடகை மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் சொத்து வரி உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 11ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக, தமிழ்நாடு வணிகர்சங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர்சங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்பிற்குள் வராதவர்கள், இணக்க வரி செலுத்துகின்றவர்கள் மீதும், வாடகைக்கு 18 சதவீத வரிவிதிப்பு திணிப்பு என்பது மிகவும் கடுமையாக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
ஆகவே, தமிழக வணிகர்சங்கங்களின் பேரரமைப்பு சார்பில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்குரிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, அடுத்த மாதம் 11ந்தேதி, தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சாமானிய வணிகர்களை பாதுகாக்கவும், தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களை அப்புறப்படுத்தி விடமால் பாதுகாப்பதற்கும், மத்திய நிதி அமைச்சர் கருணையுடன் பரிசீலனை செய்து, இணக்க வரி செலுத்துகின்றவர்கள், வரி வரம்பிற்குள் வராதவர்கள் மீது ஜி.எஸ்.டி கட்டயமாக அமல்படுத்தக்கூடாது, சிறுசிறுகடைகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டிவரியை மத்தியரசு திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
5, 12, 18, 28 என்று உலகத்தில் அதிக அளவு ஜி.எஸ்.டி வரியை வணிகர்கள் செலுத்தும் நாடு இந்தியா தான். ஒரே ஒரு வரி முறை, அது எந்த சதவீதம் என்பதை அரசு முறைப்படுத்த வேண்டும். ஒரு முறை வரி ஏற்படுத்தினால் அரசு 3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களை சமூக ஊடக முறையில் ஆப்களை வைத்து கொண்டு சலுகை என்ற பெயரில் வணிகர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இது போன்ற சமூக ஊடகங்களை முடக்க வேண்டும், இல்லையென்றால் வணிகர்கள் வேலைவாய்ப்பினை தேடி போக வேண்டிய நிலை ஏற்படும். வேலை தருவதற்கு அரசு தயராக இல்லை.
ஆன்லைன் வர்த்தகத்தினை கட்டுப்படுத்த வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு இருக்கிறோம். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. மேலும் 6 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும். தினசரி சந்தைகள் கடைகளுக்கு வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது. வாடகை கட்டணம் தொடர்பாக தமிழக அரசு கமிட்டி அமைத்துள்ளது. வாடகை கட்டணம் குறித்து சீராய்வு செய்து எளிய வணிகர்களும் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் கடையை பூட்டி வலியுறுத்துகின்றனர். 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம் என்று முதல்வர் அறிவித்த பிறகும், அதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு தரவேண்டும், பாதுகாப்பு தரவேண்டும் தவிர, கடைகளை பூட்டுங்கள் என்று சொல்லக்கூடாது.
வணிகத்தில் ஈடுபடும் கார்பரேட் நிறுவனங்கள் மொத்த வியாபாரம் செய்யலாம். சில்லறை வணிகத்தில் ஈடுபடக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால், சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கேளரா மாநிலத்தில் போய் நாம் மால் திறக்க முடியாது, ஆனால் கேரளா மாநிலம் லூல் மால் இங்கு திறக்கின்றனர். மும்பையில் உள்ள டி மார்ட் இங்கு வந்து திறக்கின்றனர். இந்த மண்ணில் உள்ள மைந்தர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சட்டவிதிமுறைகளை மீறும் கார்ப்பரேட் நிறுவனங்களை சீல் வைக்க வேண்டும்.
தமிழக மக்கள் ஒரு காலத்தில் அதிக உணர்வகளோடு இருந்தனர். தற்பொழுது சர்க்கரை நோய் என்று கூறி இனிப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை குறைத்து விட்டனர். அதனால் வீரியம் குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கடந்த ஓராண்டுக்கு முன்பு காலவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்றார். ஆனால் நடவடிக்கை இல்லை சுங்கச்சாவடிகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
இதனை எதிர்த்து அனைத்து அமைப்பகள், மற்றும் மக்கள் திரண்டு போராட்டத்தினை கையில் எடுக்க வேண்டும். அப்போது சுங்கசாவடியை அகற்றுவது குறித்து மத்தியரசு சிந்திக்கும். சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறது. ரௌடி போல் நின்று கொண்டு சுங்கச்சாவடி கட்டணத்தினை வசூல் செய்யும் நிலை உள்ளது.
நேரத்தை வீணடிக்கமால் மக்கள் விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தேசிய தங்க நாற்கர சாலை திட்டத்தினை கொண்டு வந்தார். இன்றைய அரசு அதனை வணிகமாக மாற்றி கொண்டு இருக்கிறது.சுங்கச்சாவடிகளை திரும்ப பெறும் வகையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும், இதனை அழைப்பாகவே நான் விடுகிறேன்.
கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இல்லை என்றாலும், அதிகாரிகள் கட்டயமாக ஆபாரதத் தொகை வசூலிக்கின்ற நிலை உள்ளது. அதனை அரசு கைவிட வேண்டும்.
எங்கள் இயக்கம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து போகாது. ஆளும் அரசுவுடன் சார்ந்து போகும் போது சில பிரச்சினைகளை தீர்க்க எளிதாக உள்ளது. முதல்வரை எளிதில் சந்தித்து பிரச்சினைகளை எடுத்து கூறி தீர்த்து வருகிறோம். தீர்க்க முடியாத பிரச்சினைகளும் உள்ளன. அதனையும் சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம். முடியாத பிரச்சினைகளுக்கும் நாங்கள் போராடி வருகிறோம்.
அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் சங்கத்தின் 25வது மாநாடு தமிழகமே வியக்கும் வகையில் நடத்துவற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 2026ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் எங்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கைள் குறித்து கேட்டு தீர்த்து வைப்போம் என்று அரசியல் கட்சிகள் தீர்மானம் எடுக்க கூடிய மாநாடாக அமையும்” என்றார்.
— மணிபாரதி.