நகைச்சுவை மேதையின் பேரனைப் பாராட்ட வந்த நல் உள்ளங்கள்! –’உருட்டு உருட்டு’ விழாவில் உருக்கம்!
‘ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்’ சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்கும் பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உருட்டு உருட்டு’ மறைந்த நகைச்சுவை மேதை ஹீரோயினாக அறிமுகமாகும் இப்படத்தின் ஹீரோயினாக கன்னடத்தைச் சேநாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் பாபு ர்ந்த ரித்விகா ஸ்ரேயா நடிக்கிறார். மற்ற கேரக்டர்களில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா, சின்னாளப்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : யுவராஜ் பால்ராஜ், இசை : அருணகிரி & கார்த்திக் கிருஷ்ணன், எடிட்டிங் : திருச்செல்வம், பி.ஆர்.ஓ. :புவன் செல்வராஜ்.
விரைவில் படம் வெளியாவதையொட்டி கடந்த 11—ஆம் தேதி இரவு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. படக்குழுவினரை வாழ்த்துவதற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர்கள் கஸ்தூரி ராஜா, விக்ரமன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் வந்திருந்தனர்.
முதலில் பேசினார் தயாரிப்பாளர் பத்மராஜு,
“எங்களை வாழ்த்த வந்திருக்கும் பெரியவர்களுக்கு நன்றி. என்னைப் போன்ற புதுத் தயாரிப்பாளர்களுக்கு மீடியாக்கள் எப்போதுமே ஆதரவாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்ல படத்தை எடுத்துள்ளோம்”.
ஆனந்த் பாபு,
“எனது மகனை வாழ்த்த வந்திருக்கும் சீனியர் டைரக்டர்களுக்கு மிகவும் நன்றி. இது எங்க அப்பா நாகேஷ் ஐயா செய்த புண்ணியம். நான் சினிமாவிற்கு வந்த போது பத்திரிகையாளர்கள் எப்படி ஆதரவளித்தீர்களோ, அதே போல் எனது மகனுக்கும் ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்”.
ஹீரோ கஜேஷ்பாபுவும் டைரக்டர் பாஸ்கர்சதாசிவமும் பாவாடை தாவணியில் பளிச்சென வந்த ஹீரோயின் ரித்விகாவும் பணிவுடன் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, ”எங்களின் வளர்ச்சிக்கு மீடியாக்கள் சப்போர்ட் தேவை” என்பதையும் மற்க்காமல் குறிப்பிட்டனர்.

இயக்குனர் கஸ்தூரிராஜா,
“படத்தின் டைரக்டர் பாஸ்கர் சதாசிவத்தை சின்ன வயதிலிருந்தே எனக்குத் தெரியும். அவனின் சித்தப்பா வஜ்ரவேலு பல வருடங்களுக்கு முன்பு எனக்கு கார்டியனாக இருந்தவர். நாட்டுப்புறப் பாட்டு பட ரிலீஸின் போது ஏற்பட்ட சிக்கல் தீர உதவியவர். அவருக்காகவும் மாபெரும் கலைஞன் நாகேஷ் அவர்களுக்காவும் தான் இந்த விழாவிற்கு வந்தேன். ஆனந்தபாபுவின் சூழ்நிலையை நேரடியாகப் பார்த்தவன் நான். கஜேஷை நடிக்க வைக்க பல கம்பெனிகளுக்கு அலைந்தவர். ஒருமுறை என்னுடைய ஆபீசுக்கும் வந்திருக்கார். தனது மகனுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டார். அவருடைய கஷ்டங்கள் தீரட்டும். இப்படம் வெற்றியடையட்டும்”.
“ஆர்.வி.உதயகுமார்,
“நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்து, தான்பட்ட கஷ்டங்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு உணரவைத்து அடுத்தவர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்வோரின் பிள்ளைகள் நன்றாக வருவார்கள். அந்த வகையில் ஆனந்த்பாபுவின் மகன் கஜேஷும் நன்றாக வருவான்”.
டைரக்டர் விக்ரமன்,
“நாகேஷ் அவர்களுடன் ஒரு படத்திலும் ‘புதுவசந்தம்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ படங்களில் ஆனந்த் பாபுவுடனும் வேலைபார்த்துள்ளேன். பாடல்களில் டான்ஸ்மூவ்மெண்டை வீட்டிலேயே ரிகர்சல் பார்த்துவிட்டுத் தான் ஷூட்டிங் வருவார் ஆனந்த் பாபு. மாபெரும் கலைஞனான நாகேஷின் கடின உழைப்பையும் ஆனந்த் பாபுவின் திறமையையும் பார்த்து கஜேஷ் கற்றுக் கொண்டு சினிமாவில் நல்ல நிலைக்கு வரவேண்டும்”.
— மதுரை மாறன்