கட்டிலில் தூங்கிய விஏஓ – கீழே விழுந்து குத்திய கத்தியால் மரணம் !

0

குளித்தலையில் இரவில் கட்டிலில் தூங்கிய விஏஓ கீழே விழுந்த போது  குத்திய கத்தியால் சிகிச்சை பலனின்றி இறந்தார். குளித்தலை போலீஸ் வழக்கு பதிவு. திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, சீனிவாசநல்லூரை சேர்ந்தவர் முருகன் மகன்  சர்மா வயது 32.

இவர் கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், கே.பேட்டை வருவாய் கிராம விஏஓ வாக வேலை பார்த்து வருகிறார். இவர் குளித்தலை நகர் பகுதி கலப்பு காலனியில் குடியிருந்து வருகிறார்.  இவரது மனைவி கௌசல்யா.  இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

இவர்  கடந்த 10 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.  அப்போது கட்டில் அடியில் இருந்த கத்தி குத்தியதில் சர்மா காயமடைந்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

குளித்தலையில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை 4:15 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து அவரது தாய் முருக செல்வி குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்த சம்பவம் கிராம நிர்வாக அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-நௌஷாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.