அதிசய முட்டையிடும் ஆக்காட்டிப் பறவைகள் ! பறவைகள் பலவிதம் பாகம் -07
ஜிம்கார்பெட் என்ற வேட்டையாளர் விலங்குகளுக்கு வேட்டையாளரைக் காட்டிக் கொடுக்கும் பறவைகளில் ஒன்றாக இந்த ஆள் காட்டியைக் குறிப்பிட்டுள்ளார். குரங்குகள், மயில்கள், காரிக்குருவிகளும் இத்தகைய பழக்கமுடையன என்று கூறுகிறார்.
இது இதனுடைய குரலால் இவ்வாறு எச்சரிக்கை செய்யும் செயல், “ஆற்றிய லிருந்த இருந்தோட டஞ்சிறை / நெடுங்கால் கணந்துள் ஆளறி வுறீஇ / ஆறசெல் வம்பலர் டைதலை பெயாக்கும்” -மலையுடைக் கானம் (குறுந்தொகை 350).

இவை கூடுகட்ட அதிக முயற்சி எடுத்துக் கொள்வதில்லை. தரிசு நிலத்தில் சரளைக் கற்களை வட்டமாகக் குவித்து முட்டையிடும்.
இங்கு ஆள்காட்டிக் குருவியில் இருவகைகள் காணப்படுகின்றன. அண்மையில் பழுப்புநிற ஆள்காட்டி காணப்பட்டதாகச் செய்தியும் உள்ளது. கண்ணைச் சுற்றி மஞ்சள்நிறத் தோலைக் கொண்டவை மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow Wattiled Lapwing) என்றும் கண்ணைச்சுற்றி சிவப்புத் தோலை உடைய ஆள்காட்டி குருவியைச் சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red Wattiled Lapwing) என்றும் அழைப்பர்.
பொதுவாக, மஞசள் மூக்கு ஆள்காட்டி வறட்சியான திறந்த வெளிகளிலும் கற்பாங்கான நிலத்திலும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி நீர்நிலைகளுக்கு அருகாமையிலும் காணமுடியும்.
இத்தகைய மற்ற பறவைகளின் உற்ற தோழனாக விளங்கும் ஆள்காட்டிக் குருவிகளுடன் பழகிய நாட்டுமக்கள் தங்களுடைய இன்ப துன்பங்களைக்கூட ஆள்காட்டிக் குருவியின் மேலேயேற்றிப் பாடிய அருமை, அழகு போற்றத்தக்கது.
இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே பிழைப்புக்காக மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அதற்கான தகவமைப்புகளை இயற்கையே அதற்கு வழங்கியிருக்கிறது. அவற்றை பற்றி புரிந்துக் கொள்ள ஆட்காட்டி பறவைகளின் பிழைப்புக்கான போராட்டத்தையும் இயற்கை அதற்கு வழங்கிய கொடைகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஆட்காட்டி பறவைகளின் இனப்பெருக்க காலம் பொதுவாக மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை ஆகும். இணை சேர்வதற்கு முந்தைய காலத்தில், ஆண் பறவை தன் சிறகுகளை சிலும்பி பெரிதாக மாற்றியும், தன் அலகை மேல்நோக்கி காண்பித்தும் பெண் பறவைகளை கவர முயற்சி செய்யும். தனக்கான இணையை தேர்வு செய்த பின்னர், தனக்கான குடும்பத்தை உருவாக்கி, தரையில் கூடு கட்டும் செம்மூக்கு ஆட்காட்டி
தரையில் சற்று குழிவான இடத்தை தனக்கான கூடாக தேர்வு செய்யும். சில சமயங்களில், கூழாங்கற்களை வட்ட வடிவில் சேமித்து வைத்து கூடு அமைக்கும். மூன்றிலிருந்து நான்கு முட்டைகள் இடும். அந்த முட்டைகளின் சிறப்பு என்னவென்றால் அந்த கூடு கட்டப்பட்டிருக்கும் மண்ணின் நிறத்திற்கு ஏற்றாற் போல் முட்டையும் உருமாறிக் கொள்ளும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உதாரணமாக ஒரு ஆட்காட்டி குடும்பம் செம்மண் தரையை தேர்ந்தெடுத்து கூடு கட்டினால், அதில் இடும் முட்டைகள் சிறிது செம்மையான நிறத்திலேயே காணப்படும். இதனால் தரையில் இருக்கும் முட்டைகளை எளிதில் பிரித்தறிந்து பார்க்க இயலாது. பார்ப்பதற்கு கூழாங்கல்லை போலவே காட்சியளிக்கும்.
மேலும் முட்டைகளின் ஓட்டுப் பகுதியில் சற்று கருமையான நிறத்தில் ஒழுங்கில்லாத கரும்புள்ளிகள் காட்சியளிப்பதால், திடீரென்று பார்ப்பவர்களுக்கு கூழாங்கற்களைப் போல் காட்சி அளிக்கும். ஆனாலும், இந்த முட்டைகளையும் பாதுகாக்க ஆக்காட்டி பறவைகள் பல சவால்களை எதிர்கொள்ளவே செய்கின்றன.
தொடர்ந்து பேசுவோம்.
ஆற்றல் பிரவீன்குமார்.