இதைவிட எனக்கு வேறு என்ன பெருமை – வாகை சந்திரசேகர் பெருமிதம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பூந்தோட்டம் காஜா பேட்டை மெயின் ரோட்டில்  கிழக்கு மாநகர பாலக்கரை பகுதி  திமுக சார்பில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் டி பி எஸ் எஸ் ராஜுமுகமது  தலைமை தாங்கினார். ஐம்பதாவது வட்டக் கழக செயலாளர் சீனிவாசன்  வரவேற்புரை ஆற்றினார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கூட்டத்தில் கழக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை செயலாளர் வாகை சந்திரசேகர் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர்  பங்கேற்று கழக அரசின் சாதனைகளையும் கழக தலைவர் மு க ஸ்டாலின் கடந்து வந்த பாதைகளையும் எடுத்துக் கூறி உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் செங்குட்டுவன் லீலாவேலு மூக்கன், நூற்கான், சந்திரமோகன் , பொன்செல்லையா, சரோஜினி,  துணைமேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், மணிவேல்,   விஜயகுமார், பாபு, மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துறை அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக  50 ஆ வட்டக் கழகச் செயலாளர் ஞானசேகர் நன்றி  கூறினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நடிகர் வாகை சந்திரசேகர் சொற்பொழிவு

திமுகவில் எத்தனையோ நடிகர்கள் வந்து சென்றிருக்கலாம் ஆனால் தலைவர் கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கழகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் இதைவிட எனக்கு வேறு பெருமை என்ன கிடைக்கப் போகிறது.

இந்தியாவிலேயே தலைசிறந்த முதல் மாநிலமாக ஒரு மாநிலம் இருக்கிறது என்றால் அது திராவிட மாடல் ஆட்சி செய்கின்ற தமிழ்நாடு தான் நம் முதல்வர்  தளபதி தான் இந்தியாவிலேயே சிறந்த முதல் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்.  தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு பைசா நிதி கொடுக்க மறுக்கிறது.

எல்லா வகையிலும் சிறந்த ஆட்சி நடத்துகின்ற மக்களுக்கு நல்ல மகிழ்ச்சி தருகின்ற ஆட்சி நடத்துகின்ற சிறந்த முதல்வரகத்தான் தளபதி அவர்கள் இருக்கின்றார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதியார் சொன்னார் தேன் வாயில் பாய்ந்தால் இனிக்கும் தேன் காதில் பாய்ந்தால் இனிக்குமா காதிற்கு இனிக்கின்ற சுவை தெரியாது ஆனால்  அந்தச் செய்தி காதில் இனிக்கின்ற மாதிரி ஒரு உணர்வை  கொடுக்கும் என்று பாரதி சொன்னார். தமிழ் என்று சொல்லும் பொழுது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும் எனக் கூறினார். ஒரு மகன் தன் தன் தாய் தந்தையிடம் வந்து நான் பாஸாகி விட்டேன் என்று கூறுவது எவ்வாறு காதில் தேன் வந்து பாயுமோ அதுபோன்றுதான் .

மோடிக்கும் அமிர்தாவிற்கும் ஹிந்தியை திணிப்பது திட்டமல்ல இந்தியன் பின்னால் ஒரு பூதமாக ஒழிந்து கொண்டு  இருக்கும் சமஸ்கிருதத்தை திணிப்பதே அவர்களது திட்டம் இதே 50 வருடத்திற்கு முன்னால் நம்மை சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள் அது கடவுள் பாசை அதை ஆரியர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

செத்துப் போய் இருக்கின்ற சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம் இந்தத் திட்டத்தின் மூலமாக தான் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்தி படித்தால் நன்மை இந்தி படித்தால் எல்லா மாநிலங்களுக்கும் வேலைக்கு செல்லலாம் என்று கூறுகிறார்கள்.

இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து அந்த மாநிலங்களில் வேலை இல்லை என்று இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலையில் நாங்கள் ஏன் எங்கிருந்து ஹிந்தியை கற்றுக்கொண்டு அங்கு செல்ல வேண்டும். ஒரு அமைச்சர் சொல்லுகின்றார் இந்தி படித்தால் நீங்கள் ஒரு பானிபூரி விற்பவனிடம் பானிபூரி வாங்கி தின்பதற்கு எளிதாக இருக்கும் எனக் கூறுகின்றார் இதற்காக நாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தி படிக்க வேண்டுமா?

நம்ம ஊரில் வந்து வேலை பார்க்கக் கூடிய நார்த் இந்தியன் இடம் சாப்பிடுவதற்காக நாங்கள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமா தமிழை அழிக்க வேண்டும், தமிழ் மொழியை அழிக்க வேண்டும், தமிழர்களை அழிக்க வேண்டும், தமிழ் கலாச்சாரத்தை  பண்பாட்டை அழிக்க வேண்டும்   என்பதே அவர்களுடைய மறைமுக திட்டமாக உள்ளது  பிற மாநிலங்களில் அவர்களது தாய் மொழிகளான குஜராத்தி ஒடிசி பஞ்சாபி பீகாரி  பல்வேறு மாநிலங்களின் அவர்களது தாய்மொழிகள்   அழிக்கப்பட்டு இந்தி மொழியை அங்கு பேசப்படுகிறது. இதே நிலைமை தமிழ்நாட்டிற்கு வருவதற்கு மிக விரைவில் வருவதற்கான சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலங்களில் என்ன நடந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்களான பீகார் சத்தீஸ்கர் ஜார்கண்ட் மத்திய பிரதேஷ் குஜராத் ஆகிய மாநிலங்களில் மூன்று மொழிகளை சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை இந்த மாநிலங்களில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளது. இந்த மாநிலங்களில் உயர்கல்விகளில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நமது ஒன்றிய கல்வி அமைச்சர் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதியை தருவோம் என கூறுகிறார். திராவிட மாடல் ஆட்சி கல்வி சுகாதாரம் அறிவியல் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்கிறது. இவ்வாறு பல்வேறு கருத்துக்களை கூறி உரையாற்றினார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.