அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கூட்டுக் குடும்பத்தின் அருமையைச் சொல்லும் ‘வீராயி மக்கள்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க

கூட்டுக் குடும்பத்தின் அருமையைச் சொல்லும் ‘வீராயி மக்கள்’ – ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமத்து மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’.

ஆகஸ்ட் மாதம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூலை 20 அன்று சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. இந்நிகழ்வினில் பேசியவர்கள்…

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நடிகை தீபா சங்கர்
“இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள். படத்தில் என்னுடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் என்னுடன் ஒரு சொந்த உறவை போலவே பழகினார்கள்”.

இயக்குநர் கோகுல்,
“நாகராஜை நீண்ட நாட்களாக எனக்குத் தெரியும். பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இது போன்ற மண் சார்ந்த படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாகரிகம் என்பது கிராமத்தில் தோன்றியது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்த என் நண்பனுக்கு வாழ்த்துக்கள்”.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

veerai makkal tamil movie
veerai makkal tamil movie

நடிகர் வேல ராமமூர்த்தி
“இந்தப் படத்தில் நான் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் நாகராஜ். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும். அவருக்கு எனது வாழ்த்துகள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நிச்சயம் இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் தயாரிப்பாளர் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் பெரிய வெற்றியை ஈட்டுவார். இது போன்ற படங்களை மேலும் தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”

ஒளிப்பதிவாளர் சீனிவாசன்
“தயாரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார், படப்பிடிப்பின் அனைத்து சூழலிலும் எங்களுக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தார். படத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது”.

தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் சுரேஷ் நந்தா ,
“இதுதான் எனக்கு முதல் மேடை. கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் நாகராஜிற்கு நன்றி. தயாரிப்பாளர் மற்றும் கதைநாயகன் என்பது பெரிய பொறுப்புதான் அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன்.இந்தப் படம் அனைவரையும் திருப்திப் படுத்தும் என்று நம்புகிறேன். படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களுக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி”.

நடிகர் ரவி மரியா, “இந்தப் படம் இயக்குநரின் 25 வருட போராட்டம். பல வலிகளை சுமந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். கண்டிப்பாக அவரது உழைப்பு வீண் போகாது”.

இயக்குநர் நாகராஜ் “இந்தப் படம் எனக்கு மிகப்பெரியவாய்ப்பு. முதல் படம் முடித்த பிறகு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் என் நண்பர்கள் தான் என்னை நகர்த்தி சென்றனர். அவர்களில் சிலர் இங்கு வந்துள்ளனர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் சுசீந்திரன் சாருக்கும் நன்றி.

ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. இப்படிப்பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் ஆழ் மனதை தொடும் என்று நம்புகிறேன். என்னுடன் பணி புரிந்த அனைவருக்கும் நன்றி”.

இப்படத்தில் வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.