அங்குசம் பார்வையில் ‘99/66’  

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு -கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள்-இசை-டைரக்‌ஷன் : மித்ரா பிக்சர்ஸ் எம்.எஸ்.மூர்த்தி, ஆர்ட்டிஸ்ட் : ரச்சிதா மகாலட்சுமி, சபரி, ரோகிந்த், ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, பி.எல்.தேனப்பன், சிங்கம்புலி, சாம்ஸ், அம்பானி சங்கர், ஸ்ரீலேகா,  முல்லை, கோதண்டம்& எம்.எஸ்.மூர்த்தி, ஒளிப்பதிவு : சேவிலோ ராஜா, எடிட்டிங் : மீனாட்சி சுந்தரம், பி.ஆர்.ஓ. : புவன் செல்வராஜ்.

எம்.எஸ்.மூர்த்திக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் பி பிளாக் 66-ஆம் நம்பர் வீட்டை வாங்கி குடியேறுகிறார்கள் சபரியும் ரச்சிதா மகாலட்சுமியும். அதே குடியிருப்பின் சி பிளாக் 99-ஆம் நம்பர் வீட்டில் இருக்கும் ஸ்வேதாவுடன் நட்பு ஏற்பட்டு பழக ஆரம்பிக்கிறார் ரச்சிதா. இதற்கிடையே எக்ஸ்போர்ட் & இம்போர்ட் கம்பெனி நடத்துவதாக ரச்சிதாவிடம் சொல்லும் சபரி, ரச்சிதாவின் பேரில் இருக்கும் 2 கோடி ரூபாய் டெபாசிட், மற்றும் இன்சூரன்ஸ் பணத்திற்காக இரண்டு முறை ரச்சிதாவை போட்டுத்தள்ளும்  முயற்சியில்  இறங்கி ஃபெயிலியராகிறார். இவர் போட்டுத்தள்ள நினைக்கும் போதெல்லாம் ஒரு அமானுஷ்ய சக்தி திடீர் திடீரென வந்து ரச்சிதாவைக் காப்பாற்றுகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

 ‘99/66’  movieஸ்வேதாவை அவரது புருஷனும் பவன் கிருஷ்ணாவும் இணைந்து குளோஸ் பண்ணுகிறார்கள். இதைப் பார்த்து அலறியடித்து ஓடிவரும் ரச்சிதா, எம்.எஸ்.மூர்த்தியிடம் சொல்லிக் கதறுகிறார். “அந்தப் பொண்ணு செத்து பலமாசமாச்சேம்மா. நீ யாரைப் பார்த்த?” என மூர்த்தி சொன்னதும் பகீராகிறார் ரச்சிதா.

அப்படின்னா ஸ்வேதா எப்படி செத்தார்? யாரால் கொல்லப்பட்டார்? இதான் இந்த 99/66 .

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அடுக்குமாடி குடியிருப்பு… திகில் சம்பவம், லைட்டுகள் திடீர் திடீரென எரிந்து அணைவது இதெல்லாம் பழசு தான்.

ஆனா சாமியாரிணி கே.ஆர்.விஜயா வந்து, “இங்க நல்ல ஆத்தா ஒண்ணு தான் சுத்திக்கிட்டிருக்கு. அதோட வேலை முடிஞ்சதும் கிளம்பிரும். யாரும் பயப்பட வேணாம்” என ஆறுதல் சொல்லிவிட்டுப் போகிறார். இது புதுசு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அந்த நல்ல ஆத்மா மூர்த்தியின் மகளான  ஸ்வேதா தான். சிறுவயதிலேயே புத்தர் மீது நாட்டம் கொண்டு அவரின் போதனைகளை தீவிரமாக பின்பற்றுகிறார் ஸ்வேதா. அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் மகளை அழைத்துக் கொண்டு வருகிறார் எம்.எஸ்.மூர்த்தி. டாக்டருக்கு படிக்க வைப்பதோடு, மகள் பெயரில் 99-ஆம் நம்பர் வீட்டையும் வாங்கிக் கொடுக்கிறார். மகள் ஆசைப்பட்டபடியே காதலித்தவனையே [ரோகிந்த்]கல்யாணம் செய்து வைக்கிறார். பெண்களை வைத்து பிஸ்னஸ் செய்யும் பவன் கிருஷ்ணாவுடன் சேர்ந்து சொத்துக்காக கர்ப்பிணி என்ற ஈவிரக்கம் இல்லாமல்  ஸ்வேதாவைக் கொல்கிறார். அதன் பின் நடப்பதெல்லாம் அமானுஷ்யங்கள் தான்.

 ‘99/66’  movieரச்சிதா மகாலட்சுமி சும்மா கும்முன்னு இருக்கார். இளம் நடிகைகளுக்கே சவால்விடுகிறார். இவரின் கணவராக வரும் சபரி எப்பப் பார்தாலும் உர்ருன்னே மூஞ்சிய வச்சிருக்கார். பார்ப்பதற்கு பளிச்சுன்னு இருக்கார் ஸ்வேதா. தான் சாகும் போது கூட “அவன் மனைவி விதவையா ஆகிருவா. அதனால அவனைக் கொல்லாதீங்கப்பா” என எம்.எஸ்.மூர்த்தியிடம் சத்தியம் வாங்கும் போது உருக வைக்கிறார்.    கேரக்டர் ரோலில் எம்.எஸ்.மூர்த்தி நடிப்பில் பாஸாகிவிட்டார்னு தான் சொல்லணும். இவரின் பாடல்கள் இசையில் பாட்டெல்லாம் டப்பாங்குத்து ரகம் தான்.

நமக்கு எரிச்சலைக் கிளப்புறதுக்குன்னே சிங்கம்புலி, சாம்ஸ், முல்லை, கோதண்டம் கூட்டணி போட்டு நம்ம கொல்றாய்ங்க.

வித்தியாசமான கதைக்களத்தில் 99/66.

அங்குசம் பார்வையில் ‘99/66’   40/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.