அங்குசம் பார்வையில் ‘வீரதீர சூரன்’ பார்ட்-2’    

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ’ஹெச்.ஆர்.பிக்சர்ஸ்’ ரியா ஷிபு, எம். மும்தாஸ். எழுத்து—இயக்கம் : எஸ்.யூ.அருண்குமார். நடிகர்-நடிகைகள் : ‘சீயான்’ விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மாருதி பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, பாலாஜி, ஸ்ரீஜாரவி, மாலா பார்வதி. ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர் ஐ.எஸ்.சி., இசை : ஜி.வி.பிரகாஷ், ஸ்டண்ட் டைரக்டர் : ஃபீனிக்ஸ் பிரபு, எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, ஆர்ட் டைரக்டர் : சி.எஸ்.பாலசந்தர், தமிழ்நாடு ரிலீஸ் : ஃபைவ் ஸ்டார்’ செந்தில், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு கிராமம் தான் கதைக்களம். அந்த ஊர்ப் பெரியவர் ரவியின் [ மாருதி ] வீட்டு வாசலில் “என் புருஷனை என்னடா பண்ணீங்க”ன்னு ஆவேசமாகக் கத்தியபடி, தனது பெண் குழந்தையுடன் பெரியவரின் வீட்டு வாசலில் உட்கார்ந்து விடுகிறார் ஒரு இளம் பெண்.   பெரியவரின் மகன் கண்ணனும் [ சுராஜ் வெஞ்சரமூடு] அவனது ஆட்களும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இன்னொரு பக்கம் மேலூர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் ஒருவர், “எனது பொண்டாட்டிய ஒன்றரை மணி நேரமா காணல, கடைசியா அவளை பெரியவர் வீட்ல பார்த்ததா சொன்னார்கள். அவளுக்கு ஏதாவது ஆச்சுனா அதுக்குப் பெரியவர் தான் காரணம்” என கொந்தளிக்கிறார்.

‘வீரதீர சூரன்’ பார்ட்-2’
‘வீரதீர சூரன்’ பார்ட்-2’

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அந்த நேரம் ஸ்டேஷனுக்கு வரும் எஸ்.பி.அருணகிரி [ எஸ்.ஜே.சூர்யா ] ரவி & கண்ணன் பெயரைக் கேட்டதும் சுர்ர்ராகி, பழைய பகை உசுப்பேறி, ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவை சாக்காக வைத்து ரவியையும் கண்ணனையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ள போலீஸ் டீமை ரெடி பண்ணுகிறார். இது தெரிந்து பதறிய ரவி, அருணகிரியைச் சந்தித்து மன்றாடியும் பலனில்லாததால், தனது பழைய விசுவாசி காளியிடம் [ விக்ரம் ] உதவி கேட்டு காலில் விழுகிறார். எஸ்.பி.யைப் போட்டுத் தள்ள களம் இறங்குகிறார் காளி.

அருணகிரியின் ப்ளான் சக்சஸா? காளியின் திட்டம் வெற்றியா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘வீரதீர சூரன்’ பார்ட்-2’.

பொதுவாகவே ஒரு சினிமாவின் முதல் பாகம் தான் முதலில் வரும். இரண்டாம் பாகம் சில மாதங்கள் கழித்தோ, சில வருடங்கள் கழித்தோ வரும். ஆனால் டைரக்டர் அருண்குமாரோ, துணிச்சலாக பார்ட்-2 வை  முதலில் களம் இறக்கியிருக்கிறார். அவரது துணிச்சலும் கதை சொல்லலும் திரைக்கதை கட்டமைப்பும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் உழைப்பை மட்டுமே நம்பி,  இரண்டரை மணி நேரப் படத்தில் இரண்டே கால் மணி நேரம் இரவு நேரக் காட்சிகளாக உருவாக்க முயற்சித்த வகையிலும் இதையெல்லாம் விட மேலாக விக்ரம் என்ற அசாத்திய நடிகனை காளியாகவே உருமாற்றி திரையில் உலாவவிட்டிருப்பதிலும் ரொம்பவே கவனம் ஈர்க்கிறார் டைரக்டர் அருண்குமார்.

‘வீரதீர சூரன்’ பார்ட்-2’
‘வீரதீர சூரன்’ பார்ட்-2’

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ரவுடியாக இருந்து மனம் திருந்தி, மனைவி கலைவாணி [ துஷாரா விஜயன் ] குழந்தைகளுடன் மளிகைக் கடை நடத்தி அமைதியாக வாழும் காளியாக விக்ரம் நடிப்புக்கு படம் முழுக்க சரியான வேட்டைக் களம் அமைந்திருக்கிறது. கலைவாணியுடன் செல்லச் சீண்டல், சிணுங்கல், திருமணத்தன்று இடுப்பில் துண்டுடன் ஜன்னல் வழியாக தாவுவது, எஸ்.பி.யைப் போட்டுத்தள்ளும் திட்டம் ஃபெயிலியரானதும் சரண்டராவதற்காக டவுசருடன் மட்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் மாஸாக எண்ட்ரியாவது, திடீரென டபுள் பேரல் துப்பாக்கியை செட் பண்ணி, எஸ்.பி.கண்முன்பே ஒருவனை போட்டுத்தள்ளுவதெல்லாம் செம க்ளாப்ஸ் அள்ளும் சீன்கள். 21 ஆண்டுகளுக்கு முன்பு  ‘தூள்’ படத்தில் பார்த்த அதே ஜிம் பாடியுடன் கும்மென இருக்கிறார் விக்ரம்.  என்ன ஒண்ணு தோல் சுருங்கிவிட்டது நன்றாகத் தெரிகிறது. வயசானாலே இதெல்லாம் இயற்கையாக நடக்கும் மாற்றங்கள் தானே.

விக்ரமிற்கு அடுத்து அசத்தியிருக்கார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் பெர்மனெண்ட் ஃபார்முலாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பகைவெறி எரியும் போலீஸ் புத்தி, சகுனித்தனம், நரித்தனம் என மூன்றையும் மிக்ஸ் பண்ணிவிட்டார் மனுஷன்.

காளியின் மனைவி கலைவாணியாக துஷாராவுக்கும் நல்ல ஸ்பேஸ் இருக்கிறது. கல்யாண ஃப்ளாஷ்பேக் சீனைத் தவிர, மற்ற சீன்களிலெல்லாம் கண்ணீரும் கம்பலையுமாக காளியிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார். க்ளைமாக்ஸில் மட்டும் ஆவேசமாக பொங்கியெழுந்துவிட்டார்.

பெரியவர் ரவியாக மாருதி, கண்ணனாக சுராஜ் வெஞ்சரமூடு இருவருமே அந்த கதாபாத்திரங்களுக்கேற்ற கனகச்சிதமான தேர்வு. போலீசிடம் சிக்கி தப்பிய பிறகு காளியைப் போட்டுத் தள்ள கொலைவெறியுடன் பாயும் இடத்தில் சபாஷ் வாங்குகிறார் சுராஜ் வெஞ்சரமூடு.

‘வீரதீர சூரன்’ பார்ட்-2’கேமராமேன் தேனி ஈஸ்வரின் உழைப்பைப் பற்றி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாலும் இந்தப் படத்தின் முதல் சூரன் ஹீரோ விக்ரம் என்றால், தீரன் தேனி ஈஸ்வர் தான். இந்த வீரனும் தீரனும் சூரனாக நம் மனசுக்குள் கம்பீரமாக நிற்பதற்கு பேருதவியாக இருப்பது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தான். இவரின் பின்னணி இசை தான் சூரனுக்கு பெரும்பலம். காளியின் மளிகைக் கடை, பெரியவரின் வீடு, இரவு நேரக் காட்சிகளில் சாலையோரம் இருக்கும் மின்கம்பங்கள், கோவில் திருவிழாக் காட்சிகளில் ஆர்ட் டைரக்டர் பாலசந்தரின் உழைப்பு தெரிகிறது.  கல்யாண மண்டபத்தில் காளியிடம் அருணகிரி மன்றாடும் சீன், காளியிடம் பெரியவர் உதவி கேட்கும் சீன்களின் நீளம் கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டதை எடிட்டர் பிரசன்னா கவனிக்காமல் விட்டாரா? அல்லது டைரக்டரின் ஸ்கிரிப்டிலேயே அப்படித் தான் இருந்திருக்குமா? என்பது நமக்குத் தெரியல.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கதையின் களம் முழுக்க முழுக்க மதுரை. ஆனால் படத்தில் வெங்கட் [ பாலாஜி ] கேரக்டர் தவிர, விக்ரம் உட்பட யாருமே மதுரை வட்டார வழக்குப் பேசாதது ஏன் டைரக்டரே..? தெலுங்கு நடிகர் மாருதியும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் நல்ல நடிகர்கள் தான், படத்தின் வியாபாரத்திற்கும் பயன்படும் தான். அதே நேரம்  சில காட்சிகளிலாலவது அவர்களை [டப்பிங் வாய்ஸில்] மதுரை பாஷையில் பேச வச்சுருக்கணும். சரி, அதக்கூட விடுங்க, துஷாரா விஜயன் நம்ம திண்டுக்கல் புள்ளதானே. அதுகூட மதுரை பாஷையில பேசலையே ஏன் டைரக்டரே? என்ன தான் கதையும் திரைக்கதையும் வலுவாக இருந்தாலும் அந்த மண்ணின் மொழி இல்லைன்னா படைப்பு அன்னியப்பட்டுவிடும் அருண்குமார் சகோதரா… அதே போல் டிசைன் டிசைனான துப்பாக்கிகள், அரிவாள், கத்திகளுடன் ரவுடிகள் இருப்பார்கள்ங்கிறதெல்லாம் கூட ஓகே தான். ஆனால் ஒரு ட்ரெங்க் பெட்டி நிறைய கன்னிவெடி வச்சுக்கிட்டு விக்ரம் சுத்துவதெல்லாம் ரொம்பவே ஓவருங்க டைரக்டரே.

இதுபோக ஏகப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள், லாஜிக் ஓட்டைகள் இருக்கு. அதுக்கு பார்ட் -1-ல் இயக்குனர் அருண்குமார் விடை சொல்வாரான்னு பார்ப்போம்.

 

—    மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.