புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கொடியேற்ற பெருவிழா !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே புண்ணியவாளன்புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தென்தமிழக புனித வேளாங்கண்ணி மாதா  திருத்தலத்தின் 45-வது ஆண்டு பெருவிழா 30/08/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை, மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள்தந்தை. ஜோசப் ரவிபாலன் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி. D. சூசை மணி , உதவி பங்குத்தந்தை அருட்பணி. A. ஜோசி, காவல்கிணறு பங்கு மேய்ப்புப் பணிக்குழு துணைத் தலைவர்- ஜெய்சன், பொருளாளர் அலெக்ஸ் வினிஸ்பர், செயலர் விஜயன், துணைச் செயலர் ஜார்ஜ்  மேலும் பங்கு மேய்ப்புப் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து இறைமக்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

இதையொட்டி திருத்தல வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவின் தொடக்க நிகழ்வாக திருத்தலத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலம்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலம்

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான இறைமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை ஆரோக்கிய மாதாவின் அருளையும் ஆசியையும் பெற்றனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த பெருவிழாவையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும்.

தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி அன்னை ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னை ஆரோக்கிய மாதாவின் தேர்பவனி செப்டம்பர் 8-ம் தேதி மாலை நடைபெறுகிறது.

இந்த பெருவிழாவையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்தும்,கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புண்ணியவாளன்புரம் திருத்தலத்திற்கு வருகை தந்து வருகின்றனர். இதனால் திருத்தல வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

—  நெல்லை ராசையா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.